இனி தவறாக EB கணக்கு எடுத்தால் நடவடிக்கை…! மின் வாரியம் அதிரடி உத்தரவு…!

Tn EB Bill 2025

தவறான கணக்கீடு செய்யும் கணக்கீட்டாளர் மீது துணை நிதி கட்டுபாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து துணை நிதி கட்டுபாட்டாளர்களுக்கு நிதி இயக்குநர் எழுதிய கடிதத்தில் ; துணை நிதி கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் வட்டங்களில் நடக்கும் பணிகள் குறித்த விவரங்களை அந்தந்த தலைமை பிரிவு அலுவலங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இருப்பினும் அவ்வப்போது மின்கணக்கீட்டு பணியாளர்கள் தவறாக மின்கணக்கீடு செய்வதால் வாரியத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. துணை நிதி கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கணக்கீட்டு ஆய்வாளர் தங்கள் வட்டத்துக்குள் உள்ள தாழ்வழுத்த பிரிவில் அசாதாரணமாக வரும் கணக்கீட்டு அறிக்கைகளை ஆய்வு செய்தால் இந்த தவறுகள் நடப்பதை தவிர்த்திருக்கலாம்.

இதேபோல தவறான கணக்கீடுகளை தொடர்ந்து மேற்கொள்ளும் பணியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே கணக்கீட்டில் ஏதாவது அசாதாரணமான நடவடிக்கை இருந்தால் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதை தொடர்ந்து அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதை முறையாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: வெள்ளையனே வெளியேறு இயக்கம்!. மகாத்மா காந்தி கூறிய அந்த வார்த்தை!. பரபரப்பான தமிழ்நாடு!. இந்திய சுதந்திரத்திற்கு எவ்வாறு உதவியது?.

Vignesh

Next Post

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்!. முன்னறிவிப்பு, விசாரணை இல்லாமல் நீக்கம் செய்யப்படாது!. தேர்தல் ஆணையம் பதில்!.

Mon Aug 11 , 2025
முன் அறிவிப்பு இல்லாமல், விசாரணை நடத்த வாய்ப்பு இல்லாமல் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து நியாயமான உத்தரவு இல்லாமல் பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த பெயரும் நீக்கப்படாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. துணை தேர்தல் ஆணையர் சஞ்சய் குமார் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் […]
Bihar voter list revision ECI 11zon

You May Like