காதலனை அடித்து ஓடவிட்ட கும்பல்..!! காதலியை மாறி மாறி கூட்டு பலாத்காரம்..!! ராணிப்பேட்டையில் அதிர்ச்சி..!!

Crime 2026

ராணிப்பேட்டை தெங்கால் பாலாற்றங்கரை அருகேயுள்ள அரசுக்கு சொந்தமான பண்ணைப் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலருடன் அமர்ந்து நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் அங்கு வந்த 3 பேர், தகராறு செய்து காதலனை கண்மூடித்தனமாக தாக்கினர். பின்னர், கத்திமுனையில் மிரட்டி அந்த இளம் பெண்ணை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்.


இதுதொடர்பாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட பார்த்திபன் (A1), சிவராஜ் (A2), ராஜா (A3) ஆகிய மூன்று பேரையும் அன்றைய தினமே சுற்றிவளைத்துக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டு வழக்கு நடந்து வந்தது. அனைத்துத் தரப்பு சாட்சிகள் மற்றும் அறிவியல் பூர்வ ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திருமதி தேன்மொழி அவர்கள் குற்றவாளிகள் மூவருக்கும் கடுமையான தண்டனைகளை வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, முதல் குற்றவாளியான பார்த்திபனுக்கு ஆயுள் தண்டனையுடன் 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.1.40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற இரு குற்றவாளிகளான சிவராஜ் மற்றும் ராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், தலா ரூ.1.30 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Read More : தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமா? இது மக்களுக்கு காது குத்தும் திட்டம்.!! இறங்கி அடித்த உதயநிதி..!!

Next Post

புதுச்சேரி வருகிறார் நித்யானந்தா..? மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை..!! போலீஸ் பாதுகாப்பு கேட்டு முதல்வரிடம் மனு..!!

Thu Sep 3 , 2026
தங்களை ‘கைலாசாவின் ஆன்மிக தூதரக உறுப்பினர்கள்’ என அறிமுகப்படுத்திக் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது, கைலாசாவிற்கும் புதுச்சேரி அரசுக்கும் இடையே நல்லுறவு மற்றும் நட்புறவை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். புதுச்சேரி ஏம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள நித்யானந்தாவின் ‘கைலாச தியானபீடத்தில்’ அடுத்த ஆண்டு கும்பாபிஷேக விழா […]
GtxM1D0XcAAZkmK 1

You May Like