நேபாளத்தில் கடந்த செப்டம்பரில் நடந்த “Gen Z” போராட்டத்தின் போது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.. இந்த நிலையில் முன்னாள் ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கும் இளைஞர் போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாள அதிகாரிகள் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளனர்.
இந்த கட்டுப்பாடுகள் பரா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அங்கு “Gen Z” இயக்கத்தை சார்ந்த இளைஞர்கள், முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மற்றும் அவரின் கம்யூனிஸ்ட் கட்சி நேபாள்–ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) ஆதரவாளர்களுடன் மோதினர்.
இன்று 2-வது நாளாக Gen Z போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது.. இந்த நிலையில், மக்களை அமைதியாக இருக்குமாறு தற்போதைய பிரதமர் மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, கேட்டுக் கொண்டார்.
வெவ்வேறு அரசியல் பிரிவுகளும் பொறுமையுடன் நடந்து கொண்டு, அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலை நோக்கி நாட்டை நிலைநிறுத்த ஜனநாயக செயல்முறைகளில் நம்பிக்கை வைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
நேபாள பிரதமர் கார்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் “நாட்டில் அமைதி மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக உள்துறை நிர்வாகத்துக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் மிகுந்த எச்சரிக்கையுடன் மற்றும் தயார் நிலையில் செயல்படுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்..
Read More : 350% வரி விதிப்பேன் என்று மிரட்டியதால் தான் மோடி போரை நிறுத்தினார்.. ட்ரம்ப் புதிய தகவல்..!



