கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தின் விமான நிறுத்தும் பகுதியில் 12 ஆண்டுகளாக, 43 ஆண்டு பழமையான போயிங் 737-200 (Boeing 737-200) விமானம் VT-EGD என்ற பதிவு எணுடன் அமைதியாக நின்றுகொண்டே இருந்தது. முழுக்க முழுக்க, தூசி படிந்து, பறவைகள் கூடுகள் கட்டிய நிலையில் ஒரு விமானம் இருந்தது.. ஆனால், அதைப் பற்றி ஏர் இந்தியா நிறுவனத்தில் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை.. கடந்த 14-ம் தேதி, அந்த விமானம் இறுதியாக துண்டுகளாக வெட்டப்பட்டு, லாரிகளில் ஏற்றி, 1,600 கிமீ தூரம் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டது.. அங்கே பொறியாளர்களுக்கான பயிற்சி சாதனமாக மாற்றப்படுவதற்காக அந்த விமானம் கொண்டு செல்லப்பட்டது..
அதற்குப் பிறகே, ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரிகள் தங்கள் உள் தகவல் தொடர்பில் ஒப்புக்கொண்டனர்.. அந்த விமானம் இன்னும் அவர்களுடைய சொத்தாக இருந்தது என்பதே அவர்களுக்கு தெரியவில்லை! 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து கணக்கில் இருந்து மாயமானது
1982-ல் இந்தியன் ஏர்லைன்ஸ்-க்காக கட்டப்பட்ட விமானம். பின்னர் அலையன்ஸ் ஏர் நிறுவனம் இந்த விமானத்தை இயக்கியது; அதற்குப் பிறகு கார்கோ சேவைகள் மற்றும் India Post தபால் சேவைகளிலும் பயன்படுத்தப்பட்டது. கடைசியாக வர்த்தக ரீதியில் பறந்த ஆண்டு : 2012
அதற்கு பிறகு கொல்கத்தாவில் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டதும், தரையில் வைக்கப்பட்டதும் தான். ஆனால் முறையாக அந்த விமானத்தின் பதிவு நீக்கப்படவோ அல்லது அழிக்கப்படவோ இல்லை.
எப்படி கணக்கில் இருந்து மறைந்தது?
2021–2023 இடையேயான Air India தனியார்மயம் (privatisation) செயல்முறையின் குழப்பத்தில், Tata குழுமத்துக்கு சொத்து மாற்றப்படும் போது, இந்த விமானம் Air India-வின் உள் சொத்து பதிவிலிருந்து (internal asset register) தவறுதலாக நீங்கியது. உடல் ரீதியாக (physically) விமானம் கொல்கத்தா விமான நிறுத்தத்தில் இருந்தபோதிலும்
எந்த தகவல்கள் அல்லது விவரக் குறிப்பிலேயும் அது காணப்படவில்லை!
அதாவது, இந்த 100 கோடி மதிப்புள்ள விமானம், புத்தகங்களில் (records) காணாமலாகி,
நேரில் தரையில் இருந்தபடியே 12 ஆண்டுகளாக யாரும் கவனிக்காமல் போனது என்பது தான் முழு கதை.
கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள், அங்கு 12 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த Boeing 737-க்கு பார்க்கிங் கட்டண ரசீதுகளை (invoices) தொடர்ந்து அனுப்பினர். அவை காலக்கெடுவில் கோடிகளில் சேர்ந்து விட்டன.
ஆனால் பிரச்சனை என்ன?
ஏர் இந்தியாவின் சொத்து பதிவுகளில் அப்படி ஒரு விமானம் இல்லவே இல்லை என்று காட்டியதால், அந்த பில்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது.. அந்த விமானம் தங்களுடைய விமானமே இல்லை” என்ற ஏர் இந்தியா நிறு
உண்மை எப்படி வெளிச்சத்திற்கு வந்தது?
2025ம் ஆண்டில், கொல்கத்தா விமான நிலையம் புதிய ஹேங்கர் திட்டத்திற்காக இடம் தேவை என்பதால் அந்த பழைய 737-ஐ அகற்றுமாறு ஏர் இந்தியா நிறுவனத்திடம் வலியுறுத்த தொடங்கியது. விமான நிலைய அதிகாரிகள் “உங்கள் விமானத்தை உடனே அகற்றுங்கள்” என கூறினர். ஆனால் ஏர் இந்தியா உயரதிகாரிகள் “எந்த விமானம்?” என்று கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்..
அதைத்தொடர்ந்து அவசரமாக பழைய, தூசி படிந்த லாக்-புக்குகள் மற்றும் கைப்பதிவு பதிவுகள் அனைத்தையும் ஆய்வு செய்தபோது, அந்த Boeing 737-200 உண்மையிலேயே Air India-வின் சொத்துதான் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி கேம்பெல் வில்சன் (Campbell Wilson) இந்த சம்பவத்தை நிறுவனத்திற்குள் வெளியிட்ட குறிப்பில் “மிகவும் அபூர்வமானது” என்று விவரித்தார். மேலும் அரசுத் துறையிலிருந்து தனியாருக்கு சொந்த மாற்றப்பட்ட (privatisation) காலத்தில் அந்த விமானத்தின் மீது ஏர் இந்தியா“முழுமையாக கண்காணிப்பை இழந்துவிட்டது” எனவும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து நவம்பர் 14, 2025 அன்று கொல்கத்தா விமான நிலையத்தின் விமான நிறுத்தும் இடத்தில் அந்த விமானத்தின் இறக்கைகள், ல், என்ஜின்கள் அகற்றப்பட்டது.. விமானத்தின் உடல் (fuselage) மூன்று பெரிய பகுதிகளாக வெட்டப்பட்டது.. அனைத்தும் பல சக்கரங்களைக் கொண்ட மல்டி-ஆக்சில் டிரெய்லர்களில் ஏற்றப்பட்டது.. பாதுகாப்பிற்காக கனரக காவல் (heavy police escort) வழங்கப்பட்டது..
இந்த பழைய 737-200 தற்போது பெங்களூருவில் உள்ள ஏர் இந்தியா இன்ஜினியனிர்ங் சர்வீஸ் நிலையத்தில் முழு அளவிலான பயிற்சி மாடல் (full-scale training mock-up)
ஆக பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானம் அகற்றப்பட்டதன் மூலம் பல ஆண்டுகளாக செலுத்தப்படாமல் இருந்த பார்க்கிங் கட்டணங்களை கொல்கத்தா விமான நிலையம் வசூலித்துள்ளது..
‘மறக்கப்பட்ட’ முதல் விமானம் அல்ல
கொல்கத்தா விமான நிலையத்தில் பல ஆண்டுகள் கவனிக்கப்படாமல் கிடந்த விமானங்களை வெளியேற்றுவது இது முதல் சம்பவம் அல்ல. கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தது நான்கு விமானங்கள், அதில் மற்றொரு அஞ்சல் தாங்கிச் சென்ற 737-200 உட்பட, நீண்ட கால புறக்கணிப்புக்குப் பிறகு அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.
VT-EGD விமானம் வெளியேறியது வெறும் பழைய விமானம் அகற்றல் மட்டும் இல்லை..
அதைக் காட்டிலும் மிகப் பெரிய பாடம்: விமானத் துறையின் மிகப் பெரிய “பேய்கள்” வானத்தில் இல்லை. சில நேரங்களில் அவை விமான நிலையத்தில் நம் கண்முன்னே நின்றுகொண்டே இருந்தும் யாருக்கும் தெரியாமல் இருப்பது தான்..
Read More : மது, சிகரெட்டுகளை விட ஆபத்தானது.. மக்களின் உயிரைப் பறிக்கும் சைலன்ட் கில்லர் இதுதான்!



