விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை ; போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!

லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மென்பொறியாளரை சென்னை விமான நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனில் இருந்து 289 பயணிகளுடன் சென்னைக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த சுப்பையா, பவானி என்கிற தம்பதி தனது 15 வயது மகளுடன் பயணம் செய்னர். சென்னைக்கு வந்த தம்பதியர் அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு சென்னையில் உள்ள தங்கள் வீட்டிற்கு சென்றுள்ளனா்.

விமானத்தில் பயணம் செய்யும் பொழுதே, சிறுமி மவுனமாக இருந்துள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமி தனி அறையில் அழுதபடி சோகமாக இருந்துள்ளார். இதனை கவனித்த பெற்றோர், மகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அந்த சிறுமி அழுது கொண்டே, விமானத்தில் பயணித்தபோது, தனது பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ஆண் பயணி, தன்னிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டார். பயணிகளுக்கு மத்தியில் வெளியில் சொன்னால் அவமானம் ஏற்படும் என்பதால் சொல்லாமல் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் மகளுடன் வந்த பெற்றோர், விமான நிலைய மேலாளரிடம் புகார் செய்தனர். அதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஜாவாஸ் ஜார்ஜ் என்பவரை போக்சோ சட்டத்தில் செய்தனர். கைது செய்யப்பட்ட ஜாவாஸ் ஜார்ஜ் அயா்லாந்து நாட்டில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Post

’தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை’..!! சுப்ரீம் கோர்ட்டில் கைகூப்பி மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்..!!

Tue Apr 16 , 2024
”தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். இதற்காக பொதுமன்னிப்புக் கேட்கவும் தயாராக உள்ளேன்” என்று சுப்ரீம் கோர்ட்டில் கைகூப்பி மன்னிப்புக் கோரினார் பாபா ராம்தேவ். குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்களை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இந்த விளம்பரத்திற்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் […]

You May Like