குளுகுளு நியூஸ்..!! நாளை முதல் ஆரம்பம்..!! மக்கள் மகிழ்ச்சி..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன நல்ல செய்தி..!!

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் வரும் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால், கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 7ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று (ஏப்.6) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை (ஏப்.7) கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 8ஆம் தேதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 9ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 10, 11ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : கொரோனாலாம் சும்மா..!! கொடிய வைரஸாக மாறும் H5N1..!! மரணம் உறுதி..!! மருத்துவர்கள் பகீர்..!!

Chella

Next Post

நாய்களின் குணம் மனிதர்களின் மூளையுடன் ஒத்துப்போகிறது!… ஆய்வில் அதிர்ச்சி!

Sat Apr 6 , 2024
Dogs: நாய்களின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஆராய்ச்சியில் விசித்திரமான குணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாய்கள் மனிதர்களின் எளிதான நண்பர்களாகின்றன. பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டில் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அவற்றின் நடத்தை குறித்து பல வகையான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஒரு புதிய ஆய்வில், நாய்களும் பல வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்துகொள்வது கண்டறியப்பட்டுள்ளது. ஹங்கேரியின் புடாபெஸ்டில் உள்ள Eötvös Laurent பல்கலைக்கழகத்தின் மரியானா போரோஸ் தலைமையில் ஒரு […]

You May Like