GOAT First Single : 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை..! “அரபிக் குத்து” சாதனையை முறியடித்த “விசில் போடு”..!

கோலிவுட் என்பது தமிழக அரசியல் மற்றும் ஆட்சி பீடத்துக்கான ராஜபாட்டையாக விளங்கி வருகிறது. இந்த வழியில் பல நட்சத்திரங்கள், சினிமா மூலமாக சேகரித்த பிரபல்யம், ரசிகர் பட்டாளம் ஆகியவற்றை தேர்தல் அரசியலில் வாக்குகளாக மாற்றி வெற்றி பெற்றுள்ளன. இந்த நட்சத்திரங்களின் வரிசையில் தளபதி விஜயும் சேர்ந்திருக்கிறார். புதிய கட்சியை ஆரம்பித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இந்த இடைவெளியில் ஒப்புக்கொண்ட ஒரு சில திரைப்படங்களை வேகமாக முடித்துக்கொடுத்தும் வருகிறார். இதில் நேற்றைய தினம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கோட்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீடாக, ‘விசில் போடு’ என்ற பாடல் வெளியானது. பாடல் வெளியான வேகத்தில் விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி, பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

யுவன் சங்கர் ராஜாவுடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் இணைந்திருக்கிறார். விஜய் மட்டுமன்றி பிரபு தேவா, பிரசாந்த் என எதிர்பார்ப்புக்குரிய சக நடிகர்களும் இந்த பாடலில் விஜயுடன் சேர்ந்து நடனமாடுகின்றனர். இசை, காட்சி அனுபவம், பாடலை பாடிய விஜய் என ரசிகப் பார்வைக்கு எந்த குறையும் வைக்காத ‘விசில் போடு’ பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக தென்னிந்திய திரைப்படங்களில் முதல் இடத்தில் இருந்தது விஜயின் பீஸ்ட் படத்தில் வரும் “அரபிக் குத்து” பாடல் தான். இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 23.77 மில்லயன் பார்வைகளை கடந்திருந்த நிலையில், கோட் படத்தின் “விசில் போடு” பாடல் இதனை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

Read More: விவாகரத்து வழக்கு: தனுஷ் ஐஸ்வர்யா நேரில் ஆஜராக உத்தரவு!

Kathir

Next Post

PM MODI | "திமுகவால் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அவமானம்"... அம்பாசமுத்திரத்தில் கண் கலங்கிய பிரதமர் மோடி.!!

Mon Apr 15 , 2024
PM MODI: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி(PM MODI) பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து […]

You May Like