தங்கம் விலை இன்றும் குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.41,240க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,155க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.41,240க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 10 காசு குறைந்து ரூ.67.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,400க்கு விற்பனையாகிறது..

RUPA

Next Post

விபரீதத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்…..! மருத்துவமனையில் இளைஞர்…..!

Thu Mar 9 , 2023
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் இருக்கின்ற மார்பல்லி என்ற கிராமத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.போலி பண்டிகை வட மாநிலங்களில் கொண்டாடப்படுவது வழக்கம். மிக விமர்சையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் போது ஒருவர் மீது, ஒருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாக கலர் பொடி தூவுவது வழக்கம். அந்த வகையில், அம்பா தாஸ் என்ற இளைஞர் ஹோலி பண்டிகையின்போது சபீர் என்ற நபர் மீது கலர் பொடியை தூவி இருக்கிறார். […]
செலவுக்கு பணம் தராததால் பாட்டியை தீவைத்து கொன்ற பேரன்..!! பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு..!!

You May Like