ஹேப்பி நியூஸ்..! தங்கம் விலை மீண்டும் குறைவு.. இன்று எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா?

1730197140 4512 2 1

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. கடந்த சில நாட்களில் ரூ.1300-க்கு வரை விலை குறைந்தது. ஆனால் தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்தது..

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.9,215-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.120 குறைந்து, ரூ..73,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஆனால் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது… இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RUPA

Next Post

தினமும் 3 பல் பூண்டு சாப்பிடுங்க; கொட்டிக் கிடக்கும் நன்மைகள்.. நோயெதிர்ப்பு சக்தி முதல் நீண்ட ஆயுள் வரை..!

Fri Aug 22 , 2025
இந்திய சமையலில் பூண்டு முக்கிய மூலப்பொருளாக உள்ளது.. இது அனைத்து வகையான சமையலின் சுவையை அதிகரிக்கிறது. பூண்டு சமையலில் பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மூன்று பல் பூண்டு சாப்பிடுவது நமக்கு பல நன்மைகளை அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 3 பல் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.. இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு […]
garlic 11zon

You May Like