ராமாயணா படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோவை இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்வீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகு வரும் படம் ராமாயணா.. இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் இது தான். இந்தப் படத்தின் மிகப்பெரிய பட்ஜெட் ரூ.835 கோடி என்று கூறப்படுகிறது. இந்திய சினிமா வரலாற்றில் இவ்வளவு அதிக பட்ஜெட்டில் உருவாகும் பாம் இதுதான்.. கல்கி 2898 AD (₹600 கோடி), RRR மற்றும் ஆதிபுருஷ் (இரண்டும் ₹550 கோடி) ஆகிய திரைப்படங்களின் பட்ஜெட்டை விட அதிகமாகும்.
இந்த படம் 2 பாகங்களாக இந்த படம் உருவாக உள்ளது. ராமாயணா பகுதி 1 சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது..
ராமாயணா படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக யாஷும், சீதையாக சாய் பல்லவியும் நடித்து வருகின்றனர். இந்த பிரம்மாண்ட படத்திற்கு ஹன்ஸ் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளனர்.. இந்த படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோவை இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த படம் 2026 தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழுவினர் பற்றிய முழுமையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ரன்வீர் கபூரும், யாஷும் வரும் சில நொடி காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
Read More : வரலாறு படைத்த தீபிகா படுகோன்..! ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்-ல் இடம்பிடித்த முதல் இந்திய நடிகை..!