மக்களே செம குட் நியூஸ்..!! அடுத்த ஒருவாரத்திற்கு குளுகுளு அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நடப்பாண்டு கோடை காலத்தில் வெப்பநிலையானது அதிகபட்சமாக பதிவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியது முதல் பதிவாகி வரும் வெப்பநிலைகள் அனைத்தும் அதிகபட்சமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை குறிப்பிட்ட இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அடுத்த ஒரு வார காலத்திற்கான வானிலை முன்னறிவிப்பை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று மற்றும் நாளை தென் தமிழக மாவட்டங்கள் வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், தமிழக கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

Read More : உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா..? எப்படி தெரிந்து கொள்வது..?

Chella

Next Post

Congress | காங்கிரஸ் கட்சியில் இணையும் பாஜக முன்னாள் அமைச்சர்.!! குஷியில் இந்தியா கூட்டணி.!

Mon Apr 8 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இந்த பொது தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. பொதுத் தேர்தலுக்கான தேதியை நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. […]

You May Like