சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணையின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. மாதம் தோறும் வணிக சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தொடர்ந்து 4வது மாதமாக வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது மே மாத தொடக்கத்தில் கூட, நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.14.50 விலையைக் குறைத்திருந்தன. ஜூன் மாதத்திலும் ரூ. 25 குறைக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.1,881க்கு விற்கப்பட்டது. இதேபோல், ஜூலை மாதத்திலும் ரூ.57.50 குறைத்து ரு.1,823.50க்கு விற்பனை செய்யப்பட்டது
இந்த நிலையில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (ஓஎம்சி)ஆகஸ்ட் 1, இன்றுமுதல் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ.33.50 குறைத்துள்ளன. அதன்படி, சென்னையில் இன்றுமுதல் வணிக எல்பிஜி சிலிண்டர் ரூ.1,789க்கு விற்பனை செய்யப்படும். இதன் மூலம் நாட்டின் சிறிய மற்றும் பெரிய உணவகங்கள், தாபாக்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு சிறிது நிவாரணம் கிடைத்துள்ளது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. இதனால் ரூ.868.50-லேயே அதன் விலை தொடர்கிறது.