இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களில் சுமார் 10 கோடி குடும்பத்தினர் நிலக்கரி, விறகு மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தியே அன்றாடம் சமையல் செய்து வந்தனர். இந்த பொருட்களை கொண்டு சமைக்கும் போது அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, பெண்களும் சுவாசம் சம்பந்தமான உடல்நலக் கோளாறுகளை சந்திக்க வேண்டிய சூழல் நிலவியது.
இதை கருத்தில் கொண்டே இந்திய அரசாங்கம் நாட்டில் உள்ள ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு எல்.பி.ஜி எனப்படும் சமையல் எரிவாயு அடுப்புகளை இலவசமாக வழங்க வேண்டும் என்பதற்காக பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களின் நன்மைக்காகவும், சுற்றுப்புறத்தை பாதுகாப்பதற்காகவும் கடந்த மே 01, 2016 அன்று அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்’. இது உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல்லியா என்ற பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியால் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பட்டியலினத்தவர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) பிரிவை சேர்ந்த குடும்பங்களுக்கு இலவசமாக LPG சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் முதல் 12 முறை கேஸ் சிலிண்டரை ரூ.300 கொடுத்து நிரப்பிக் கொள்ளலாம். அந்த தொகை மீண்டும் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே மானியமாக ஒவ்வொரு முறையும் நேரடியாக வரவு வைக்கப்படும். அதைத் தொடர்ந்து, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக 1 கோடி சிலிண்டர் இணைப்புகளை வழங்க மத்திய அரசு அறிவித்தது. இந்த விரிவாக்கத்தை பிரதம மந்திரி உஜ்வாலா யோஜானா 2.0 என்ற பெயரில் ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு புதிய பயனாளிகளுக்கும் 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ. 1,600 நிதியுதவியும், 5 கிலோ சிலிண்டருக்கு ரூ. 1,150 நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
ஆண்டுக்கு 12 முறை கேஸ் சிலிண்டரை நிரப்பிக் கொள்ளலாம். இதற்கு மானியமாக ரூ.200 வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), வனவாசிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ஏழைகளுக்கான உணவுத் திட்டப் (AAY) பயனாளிகள், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்ட பயனாளிகள் (PMAY), வனவாசிகள், தீவுகள், ஆற்றுத் தீவுகளில் வசிப்பவர்கள் போன்ற பிரிவுகளை சேர்ந்த பெண்களும் விண்ணப்பித்து சிலிண்டர் இணைப்புகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
உஜ்வாலா திட்டத்தின் மூன்றாவது பதிப்பு (PMUY 3.0 திட்டம்) கடந்த செப்டம்பர் 13, 2023 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2026க்குள் 75 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசு ரூ. 1,650 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் பயனாளிகள் வைப்புத்தொகை இல்லாத இணைப்புகளைப் பெறுவார்கள்.
அதில், முதல் 14.2 கிலோ சிலிண்டர் மற்றும் ஒரு அடுப்பு (ஹாட் பிளேட்) இரண்டும் இலவசமாக வழங்கப்படும். மேலும், ஆண்டுக்கு 12 முறை கேஸ் சிலிண்டரை ரூ.300 கொடுத்து நிரப்பிக் கொள்ளலாம். இந்த தொகை மீண்டும் உங்க வங்கி கணக்கிற்கே செலுத்தப்பட்டுவிடும். மேலும், இந்த இணைப்பை பெற எல்பிஜி விற்பனை நிலையத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.2,200 ஐ அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.
இந்தநிலையில் தற்போது, 2025-26 நிதியாண்டிற்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் ரூ.12,000 கோடி மானியத்தை வழங்க மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்டது. அரசாங்கத்தின் இந்த முடிவால் நாட்டின் சுமார் 10.33 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள்.
2025-26 நிதியாண்டில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.9 (மற்றும் 5 கிலோ சிலிண்டருக்கு விகிதாசாரமாக) வழங்க ஒப்புதல் அளித்துள்ளது” என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள், 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.12,000 கோடி செலவாகும். இந்தியா அதன் எல்பிஜி தேவையில் சுமார் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.
தமிழ்நாட்டில் மரக்கணம்-புதுச்சேரி (46 கி.மீ) சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மொத்த மூலதனச் செலவு ரூ.2,157 கோடி ஆகும். ஜூலை 1, 2025 வரை, நாட்டில் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 10.33 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியா தனது சமையல் எரிவாயு தேவைகளில் சுமார் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது, இதனால் இந்த மானியம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் முக்கிய நோக்கம், ஏழைக் குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிபொருளின் நன்மைகளை அதிகரிப்பதாகும். இதன் மூலம், மானிய விலையில் எல்பிஜி இணைப்புகளை வழங்குவதன் மூலம் பாரம்பரிய எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும், இதனால் அவர்களின் உடல்நலம் தொடர்பான அபாயங்களைக் குறைக்க முடியும். இதனுடன், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். வெளிப்படையாக, இந்தத் திட்டத்தில் அரசாங்கம் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது.