விசைத்தறி நெசவாளர்களுக்கு குட்நியூஸ்!… இனி 1000 யூனிட் இலவச மின்சாரம்!… சலுகை அறிவித்த முதலமைச்சர்!

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


விசைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 700 யூனிட் இலவச மின்சாரம் போதவில்லை என்று நெசவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்தநிலையில், தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகி உள்ளது என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். விசைத்தறிக்கு 3 நிலையிலான மின்கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்து, ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுபோன்று கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 1 முன் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

KOKILA

Next Post

120 மில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மாண்ட பங்களா.. காதலியுடன் ரகசியமாக வாழ்ந்து வரும் ரஷ்ய அதிபர் புடின்..?

Sat Mar 4 , 2023
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக இந்த போர் பார்க்கப்படுகிறது. இந்த போர் தொடங்கியது முதலே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தவறாமல் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.. இதனிடையே, ரஷ்ய அதிபர் […]
Putin Girlfriend

You May Like