தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.. ரொக்கப் பணம் மட்டுமன்றி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு விநியோகத்தை சென்னை ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 8-ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்திற் டோக்கன் வழங்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது.. டோக்கன் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் சம்மந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களை அணுகி பொங்கல் பரிசு தொகுப்புகளை அவர்கள் குறிப்பிடும் நாட்களில் வந்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருனது..
இந்த நிலையில் நாளையும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.. ரேஷன் கடைகளில் நாளையும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முழுமையாக முடிவடையாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது..
Read More : உங்கள் ரேஷன் கார்டுக்கு ஆபத்து..!! உடனே இதை பண்ணலனா ரத்தாகும்..!! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!!



