வணிகர்களுக்கு குட் நியூஸ்! ஜிஎஸ்டி கெடுபிடிகளுக்கு முற்றுப்புள்ளி! புது ரூல்ஸை அறிவித்த நிர்மலா சீதாராமன்!

Nrmala 2026

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


அப்போது, ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கான கைது அதிகாரம் ரத்து செய்யப்படுகிறது. வரி ஏய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வரம்பு 1 கோடி ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குற்றங்களுக்கான குறைந்தபட்ச தண்டனை முறை நீக்கப்பட்டு, அபராதமா அல்லது சிறை தண்டனையா அல்லது இரண்டுமா என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கும்.

குறிப்பிட்ட விதிமீறல்கள் இல்லாத பொதுவான தவறுகளுக்கு அபராத தொகை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தாமதமாக கணக்கு தாக்கல் செய்வோர் அல்லது வரி செலுத்துவதில் தவறு செய்பவர்களிடம் இருந்து நிலுவைத் தொகை, வட்டி மற்றும் உரிய அபராதம் மட்டுமே வசூலிக்கப்படும். அதிகாரிகளின் அச்சுறுத்தலோ, தேவையற்ற கெடுபிடிகளோ இருக்காது.

வரி பாக்கி 10,000 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், இனி எந்தவித ஜிஎஸ்டி நோட்டீஸ்களும் அனுப்பப்படாது. ஏற்கனவே அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ள நோட்டீஸ்கள் உடனடியாக திரும்பப் பெறப்படும். ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையை உறுதி செய்வதற்கான கால வரம்பு 15 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இனி ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பரிசீலிக்கப்படும். முறையாக ஜிஎஸ்டி செலுத்தி பொருட்கள் வாங்கும் வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதிகாரிகள் குழு ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை அளிக்கும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் வரி விகிதங்கள் மற்றும் நடைமுறைகள் சார்ந்த 99 சதவீத சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Read More : வாடகைக்கு வீடு இருக்கா? மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்! மக்களே உஷார்.. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்!

Next Post

அடங்காத ஆசை! 11 வயது சிறுவனுக்கு செக்ஸ் டார்ச்சர்! பிரபல பெண் யூடியூபர் நிஷா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

Thu Oct 8 , 2026
சமூக வலைதளங்களில் தன்னம்பிக்கை பேச்சாளராகவும் கல்வியாளராகவும் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வந்த பிரபல மலையாள யூடியூபர் நிஷா ரஃபேல் மீது, 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருச்சூர் மேற்கு காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் தளங்களில் அறிவுரைகளும் உத்வேகமும் பேசி வந்த பிரபலம் ஒருவர் மீது சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கேரளம் முழுவதும் […]
Nisha 2026

You May Like