ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி..!! இனி வெறும் ரூ.3-க்கு தண்ணீர் பாட்டில் கிடைக்கும்..!! உணவு விலையில் கம்மிதான்..!!

இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் சாா்பில் கோடை காலத்தில் ரயில் பயணிகளுக்கு, குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, 200 கிராம் எடையில் எலுமிச்சை, புளியோதரை, தயிா் சாதம் அல்லது கிச்சடி என ஏதாவது ஒன்று ‘எகனாமி மீல்ஸ்’ என்ற பெயரில் ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

325 கிராம் எடையில் பூரி மசால் மற்றும் பஜ்ஜி, ‘ஜனதா கானா’ என்ற பெயரில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 350 கிராம் எடையில் மசால் தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவு வகைகள் ‘ஸ்னாக் மீல்ஸ்’ என்ற பெயரில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 மி.லி. தண்ணீா் பாட்டில் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பயணிகள் எளிதாக அணுகுவதை உறுதி செய்ய, முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டிகளுக்கு அருகில் நடைமேடையில் இதற்கான கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Read More : அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! பண மழை கொட்டப்போகுது..!! சூப்பர் அறிவிப்பு..!!

Chella

Next Post

இஸ்ரோ எச்சரிக்கை..! வெப்பநிலை அதிகரிப்பு..! இமயமலை பனிப்பாறைகள் உடைப்பால் வெள்ளம் நிலச்சரிவு ஏற்படும்..!

Wed Apr 24 , 2024
இஸ்ரோ வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படத்தில் இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் நீர்ப்பரப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 1984ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை இஸ்ரோவால் அனுப்பட்ட பூவுநோக்கு செயற்கைகோள் மூலமாக வரைப்பட தரவுகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யபட்டது. இந்த ஆய்வின் மூலம், இமயமலையில் உள்ள 601 ஏரிகள் 2 மடங்குக்கு மேல் விரிவடைந்திருப்பதும், 10க்கும் மேற்பட்ட ஏரிகள் 1.5 முதல் 2 மடங்கு வரை அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் […]

You May Like