ரஷ்யாவின் என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி சோதனைகளில் 100% வெற்றி விகிதத்தை அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி வெற்றிகரமான சோதனைக்கு உட்பட்டு, தற்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. TASS செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, மத்திய மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் அல்லது FMBA இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Enteromix என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, mRNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, இது பல COVID-19 தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படும் அதே அணுகுமுறையாகும்.
பலவீனமான வைரஸைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, mRNA தடுப்பூசிகள் உங்கள் உடல் செல்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் புரதங்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. ரஷ்யாவின் கூற்றுப்படி, பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு தடுப்பூசி தயாராக உள்ளது, இதில் மூன்று ஆண்டுகள் தேவையான முன் மருத்துவ பரிசோதனைகள் அடங்கும். சோதனைகளில், மீண்டும் மீண்டும் டோஸ்கள் கொடுத்தாலும் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு சில சந்தர்ப்பங்களில், கட்டிகள் புற்றுநோயின் வகையைப் பொறுத்து 60 முதல் 80 சதவீதம் வரை சுருங்கியது அல்லது மெதுவாக வளர்ந்தது. சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடையே உயிர்வாழும் விகிதங்களும் மேம்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
முன் மருத்துவ ஆய்வுகள் மற்றும் மனித சோதனைகளுக்கு, குறைந்தது 48 தன்னார்வலர்கள் ஈடுபட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது இறுதி கட்டம் ரஷியாவின் சுகாதார அமைச்சரின் கையில் உள்ளது, அவர்கள் முழு சோதனை தரவுகளை அடுத்த சில வாரங்களில் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்க வாய்ப்பு உள்ளது.
அனுமதி அளிக்கப்பட்டால், என்டோரோமிக்ஸ் பொதுமக்களுக்குக் கிடைக்கும் முதல் தனிப்பட்ட mRNA புற்றுநோய் தடுப்பூசியாக மாறும். இது உலகளாவிய புற்றுநோயியல் சிகிச்சையை மறுபரிசீலனை செய்யும் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.
பெருங்குடல் புற்றுநோய்க்கான தடுப்பூசி: இந்த தடுப்பூசியின் முதன்மை கவனம் பெருங்குடல் புற்றுநோயாகும், இது பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகிறது மற்றும் பெரும்பாலும் polyp ஆக தொடங்குகிறது. ஆனால் ஆரம்பத்திலேயே இதற்கு அறிகுறிகள் இருக்காது. மேலும், வேகமாக வளர்ந்து வரும் மூளைப் புற்றுநோய் கிளியோபிளாஸ்டோமா மற்றும் சில வகையான மெலனோமாக்கள், தோல் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளுக்கான பணிகளும் முன்னேறி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? பெருங்குடல் புற்றுநோய் உங்கள் பெருங்குடலின் மிக நீளமான பகுதியில் தொடங்குகிறது, இது செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெருங்குடல் புற்றுநோய் வயதானவர்களுக்கு பொதுவானது, ஆனால் இப்போது இளைஞர்களிடையே வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது பொதுவாக பெருங்குடலுக்குள் உருவாகும் பாலிப்ஸ் எனப்படும் செல்களின் சிறிய கொத்தாகத் தொடங்குகிறது. பாலிப்கள் தாங்களாகவே புற்றுநோயாக இல்லாவிட்டாலும், காலப்போக்கில் புற்றுநோயாக மாறுகின்றன.
உலகளவில் மூன்றாவது மிகவும் பொதுவான புற்றுநோயான இது, அனைத்து புற்றுநோய்களிலும் தோராயமாக 10 சதவீதத்தை ஏற்படுத்துகிறது மற்றும் உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக உட்கொள்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைவாக உட்கொள்வது, உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடல் பருமன் மற்றும் அதிக எடை, புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்ற பொதுவான ஆபத்து காரணிகளால் இது பெரும்பாலும் நிகழ்கிறது.