கூகுள் ஊழியர்கள் கைது..! இஸ்ரேலுடன் வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என போராட்டம்..!

இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கூகுள் நிறுவனம் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதை கண்டித்து போராட்டம் நடத்திய கூகுள் ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். நியூயார்க் நகர அலுவலகம் மற்றும் சன்னிவேல் கலிபோர்னியா அலுவலகம் உட்பட பல இடங்களில் இருந்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே உலகளாவிய பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்களின் போராட்டம் வந்துள்ளது. இஸ்ரேலிய அரசாங்கம் சம்பந்தப்பட்ட சில திட்டங்களின் வளர்ச்சியில் நிறுவனத்தின் பங்கிற்கு கூகுள் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இது முதல் முறையல்ல.  

இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக அமேசானுடன் கூகுளின் 1.2 பில்லியன் டாலர் ஒப்பம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்கள், கூகுள் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அரசாங்கத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பது, கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை Google வழங்குவதை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேறும் படி கேட்டுக்கொண்டனர். போராட்டத்தை கை விட மறுத்ததால் கூகுல் நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் ஹசீம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”ப்ராஜெக்ட் நிம்பஸைக் காரணம் காட்டி பல ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தார்கள். நான் எனது வேலையை இழக்க விரும்பவில்லை. புராஜெக்ட் நிம்பஸ் வழங்கும் சேவைகள் காசாவில் நடந்து வரும் மோதலில் AI ஐப் பயன்படுத்துவதற்கு பங்களிப்பதாக கூகுள் ஊழியர்கள் கருதுகின்றனர், இதை AI- இயங்கும் இனப்படுகொலை என கருதுகின்றனர். ஊழியர்களின் போராட்டம் குறித்து கூகுல் நிறுவனம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

அடடே..!! இப்படியும் கூட வாக்களிக்கலாமா..? வாக்காளர்களே நோட் பண்ணிக்கோங்க..!!

Wed Apr 17 , 2024
வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, பூத் ஸ்லிப் வழங்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையை (Election Photo Identity Card) பயன்படுத்தி தேர்தல்களில் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. EPIC […]

You May Like