தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 2,581 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சென்னை – 194, சேலம் – 148, திருப்பூர் – 112, மதுரை – 100, கோயம்புத்தூர் – 90, தூத்துக்குடி – 90, திருவண்ணாமலை – 109 என அதிகளவிலான காலியிடங்கள் உள்ளன. நாகை – 18, தேனி – 31, ராமநாதபுரம் – 32 என குறைவான காலியிடங்களும் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி DRB இணையதளம் வழியாகவே ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி விவரம்:
* குறைந்தபட்சம் பட்டப்படிப்பு அவசியம்.
* கூட்டுறவு பயிற்சி கட்டாயம். (கூட்டுறவு சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு விலக்கு வழங்கப்படும்).
* விண்ணப்பத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்விச்சான்றுகள், புகைப்படம், கையொப்பம் ஆகியவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு ரூ.250 மட்டுமே. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 29 மாலை 5.45 மணி.
தேர்வு செய்யப்படும் முறை: கூட்டுறவு சங்க பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு தரத்தில் 200 கேள்விகளுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். ஆங்கிலம் மற்றும் தமிழில் தேர்வு நடைபெறும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இடஒதுக்கீட்டை சார்ந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இடஒதுக்கீட்டை சார்ந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசின் கீழ் கூட்டுறவு சங்கங்களில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்னப்பிக்க விரும்பும் நபர்கள் அந்நந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் (DISTRICT RECRUITMENT BUREAU-2025) மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025 மாலை 5.45 மணி வரை.