சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பஜனைக்கோவில் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார்.. இவர் தனது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு காளி, வீர பத்ரர் உள்ளிட்ட சிலைகளை வைத்து வழிபாடு செய்து வந்தார்.. மேலும் கார்த்திக் தனது வீட்டில் காளி சிலையை வைத்து மாந்திரீகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.. இதையடுத்து அப்பகுதியில் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் சிலையை எடுக்கக்கோரி வலியுறுத்தினர்.. தொடர்ந்து திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி தலைமையிலான வருவாய் துறையினர் காளி சிலையை அகற்றி கொண்டு சென்று விட்டனர்..
இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மீண்டும் தனது வீட்டில் காளி சிலை அமைப்பதற்கான உத்தரவை பெற்றார்.. கடந்த மாதம் காளி சிலையை மீண்டும் அதே இடத்தில் அவர் முயன்ற போது போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் மீண்டும் சிலைகளை எடுத்து சென்று விட்டனர்..
இந்த சூழலில் கார்த்திக் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது “ திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று சிலைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று மனுதாரருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஒலிபெருக்கிகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார்.
ஒருவர் தனது வீட்டில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினால், பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது.. அரசு அதிகாரிகள் மூட நம்பிக்கைகளுக்கும், தவறான நம்பிக்கைகளுக்கும் பணிந்து செல்லக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.. கடவுளோ சிலைகளோ மனித இனத்துக்கு எந்த தீங்கும் ஏற்படுத்துவதில்லை என்றும் அது போன்ற நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகள், அது பக்தி இல்லை எனவும் நீதிபதி தெரிவித்தார்.. மேலும் இந்த வழக்கை முடித்து வைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.



