”ஆளுநர் – நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு சொல்ல முடியாத அரசியல்”..! – அமைச்சர் துரைமுருகன்

தமிழக கவர்னர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

வேலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வேலூரில் அடி பம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அதே கட்சியை சேர்ந்தவருக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டுள்ளது. பஜாரில் பீடி, சிகரெட் விற்பனை செய்து கொண்டிருந்தவருக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பணியை செய்யக்கூடிய தகுதி அந்த காண்ட்ராக்டருக்கு இல்லை. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

”ஆளுநர் - நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு சொல்ல முடியாத அரசியல்”..! - அமைச்சர் துரைமுருகன்

ரூ.20 ஆயிரம் கோடி சுருட்டி விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிறது. அப்போது பார்க்கலாம். ஆந்திராவில் இருந்து போதை பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுகிறது. கும்மிடிப்பூண்டி முதல் கிருஷ்ணகிரி வரை ஆந்திரா பகுதி இருப்பதால் எளிதில் கடத்தி வந்து விடுகின்றனர். ஆளுநர்-நடிகர் ரஜினி சந்திப்பு சொல்ல முடியாத அரசியல். பாலாற்றில் தற்போது தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். தமிழக கவர்னர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல. அவர் தன்னை உணர்ந்து நீட் உள்ளிட்ட சட்டமசோதாக்களில் கையெழுத்திட வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

சென்னை டூ பெங்களூரு.. 2 மணி நேரத்தில் செல்லலாம்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன குட்நியூஸ்..

Thu Aug 11 , 2022
சென்னை மற்றும் பெங்களூரு இடையே பசுமை விரைவுச்சாலை அமைக்கப்படும், இது இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.. மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களில் பேசினார்.. அப்போது “ அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 26 புதிய பசுமை விரைவுச் சாலைகள் அமைக்கப்படும் என்றும் அதில் பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையும் ஒன்று என்றும் தெரிவித்தார்.. […]

You May Like