முதுநிலை சட்டப் படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

college 2025 1

சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப் படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் படிப்புக்கு மொத்தம் 260 இடங்கள் வரை உள்ளது. சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம் எனும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக் கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதில் சேருவதற்கு விருப்பமுள்ள பட்டதாரிகள் ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம் எனும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக் கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதில் சேருவதற்கு விருப்பமுள்ள பட்டதாரிகள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500-ம், இதரபிரிவினர் ரூ.1000-ம் செலுத்த வேண்டும். இதுதவிர கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பலத்த காற்றுடன் நாளை முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை...! மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை...!

Wed Jul 16 , 2025
கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கோவை […]
rain 1

You May Like