ஆக.15-ல் கிராம சபை கூட்டம்.. உங்க கிராம வளர்ச்சி பற்றி நீங்களும் விவாதிக்கலாம்..!!

Gram Sabha

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை அன்று கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.


தமிழக ஊராட்சி சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதே போல் இந்த ஆண்டும் வரக்கூடிய ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை அன்று கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கூட்டங்கள், ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும், கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரம் போன்ற விவரங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கிராம சபை கூட்டத்தில், தூய்மையான குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கியமான குடிமக்கள் தேவைகள் விவாதிக்கப்பட வேண்டும், உறுப்பினர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும். இந்த உத்தரவு அடிப்படையில், சுதந்திர தினத்தன்று ஊரக மக்கள் உரிமைகளைப் பற்றி விவாதிக்கும் ஒரு சிறப்புநாளாக கிராம சபை அமைய இருக்கிறது.

இதில் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் இதர வளர்ச்சிகள் குறித்து விவாதிக்கலாம். ஆகையால் ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அந்தந்த கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கிராமத்தின் வளர்ச்சிக்கான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

Read more: #Breaking : வரலாறு காணாத உச்சம்.. இன்று ரூ.75,000-ஐ கடந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்…

English Summary

Gram Sabha meeting to be held on August 15th.. You can also discuss the development of your village..!!

Next Post

ஏன் எல்லா விமானங்களும் வெள்ளை நிறத்தில் உள்ளன? ஆனால் இந்த நாட்டின் விமானம் மட்டும் கருப்பு நிறத்தில் உள்ளது! என்ன காரணம்?

Thu Aug 7 , 2025
அனைத்து விமானங்களும் வெள்ளை நிறத்தில் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.. சில நேரங்களில், திரைப்பட விளம்பரங்களின் ஒரு பகுதியாக விமானங்களின் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. ஆனால் அனைத்து விமானங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? வண்ணப்பூச்சு செய்யும் போது விமானத்திற்கு எடையும் அதிகரிக்கும்.. அடர் நிறங்களுக்கு அதிக பூச்சுகள் தேவைப்படுகின்றன, இது விமானத்தின் எடையை சுமார் 600-800 கிலோ அதிகரிக்கிறது. இது எட்டு பயணிகளின் எடைக்கு சமம். […]
aeroplane flight plane

You May Like