இஸ்ரோவின் உந்துவிசை வளாகமான IPRC (ISRO Propulsion Complex) தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் அமைந்துள்ளது. இவ்வளாகம், இஸ்ரோவின் ராக்கெட் மற்றும் ஏவுதள தொழில்நுட்பங்களுக்கான முக்கிய ஆய்வு மற்றும் சோதனை மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொழிற்பயிற்சி சட்டம் – 1961ன் கீழ், பட்டதாரி மற்றும் டெக்னிஷியன் பிரிவுகளில் பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் மொத்தம் 100 பயிற்சி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பொறியியல் பட்டப்படிப்பு விவரம்
மெக்கானிக்கல் பொறியியல் – 12
எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் – 10
எலெக்ட்ரிக்கல் பொறியியல் – 5
சிவில் பொறியியல் – 4
இன்ஸ்ரூமெண்டேஷன் பொறியியல் – 3
கெமிக்கல் பொறியியல் – 2
கணினி அறிவியல் பொறியியல் – 5
பொறியியல் அல்லாத பட்டப்படிப்பு விவரம்
பிஏ – 4
பி.எஸ்சி 7
பி.காம் – 4
டெக்னிஷியன் விவரம்
மெக்கானிக்கல் பொறியியல் – 15
எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் – 10
எலெக்ட்ரிக்கல் பொறியியல் – 10
சிவில் பொறியியல் – 5
கெமிக்கல் பொறியியல் – 4
என்னென்ன தகுதி:
* பொறியியல் பட்டப்படிப்பு அடிப்படையில் நிரப்பப்படும் பயிற்சி இடங்களுக்கு, அந்தந்த பொறியியல் பாடப்பிரிவுகளில் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்களுடன் BE / B.Tech பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* பொறியியல் அல்லாத பட்டப்படிப்பு பயிற்சி இடங்களுக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
* டெக்னிஷியன் (Diploma) பிரிவுக்கான பயிற்சி இடங்களுக்கு, அந்தந்த பொறியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பு (First Class) தேர்ச்சியுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் 2021, 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் தங்களின் கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
- சாண்ட்விச் (Sandwich) படிப்புகளில் பயின்றவர்கள்
- ஏற்கனவே பயிற்சி (Apprenticeship / Internship) பெற்றவர்கள்
- பணி அனுபவம் உள்ளவர்கள்
- முன்னர் பயிற்சியில் சேர்ந்து இடையில் விலகியவர்கள்
- இந்த வகை விண்ணப்பதாரர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க இயலாது.
உதவித்தொகை: இஸ்ரோவின் உந்துவிசை வளாகமான IPRC-இல் வழங்கப்படும் இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.
- பட்டப்படிப்பு தகுதி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.9,000
- டிப்ளமோ தகுதி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.8,000
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்? இப்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கவ்லித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இடஒதுக்கீடு பின்பற்றப்படும்.
நேர்காணல்: பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள், 2026-ம் ஆண்டில் ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்துகொள்ள வேண்டும். https://www.iprc.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் பூர்த்தி செய்து நேர்காணலுக்கு எடுத்து செல்ல வேண்டும்.
நேர்காணல் முகவரி; ISRO Propulsion Complex (IPRC), மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
* பொறியியல் பட்டப்படிப்பு 10.01.2026 காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை
* டெக்னிஷியன் 10.01.2026 பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை
* பொறியியல் அல்லாத பட்டப்படிப்பு 11.01.2026 காலை 9.30 முதல் பிற்பகல் 12 மணி வரை.
Read more: தட்கல் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்!தெற்கு ரயில்வேயின் புதிய ரூல்ஸ் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!



