Breaking : நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! ஒரே நாளில் ரூ.1,680 குறைந்த தங்கம் விலை..! வெள்ளி ரூ.10,000 சரிவு..!

Gold jewels new

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.210 குறைந்து ரூ.13,350-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ரூ.1,06,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை 2-வது நாளாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2.40 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : UPI பயனர்களுக்கு சூப்பர் குட்நியூஸ்..! இனி அனைத்தும் ஒரே இடத்தில்..!

RUPA

Next Post

இதெல்லாம் முதல்வர் விஜய்க்கு தெரிந்து நடக்கிறதா? அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அன்புமணி வலியுறுத்தல்..!

Wed Jun 24 , 2026
தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து காத்திருக்க வைப்பதா? மனிதவளம், எரிபொருளை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது […]
cm vijay anbumani

You May Like