பெரும் சோகம்..!! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில துணை தலைவர் உ.நீலன் காலமானார்..!!

நீடாமங்கலம் நீலன் கல்விக் குழும நிறுவனர் உ. நீலன் (88) வயது மூப்பின் காரணமாக திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் சென்னையில் காலமானார்.

விடுதலை பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில துணைத் தலைவர், பெரியாரின் தொண்டர், நூலாசிரியர் என பன்முகத்தன்மை வாய்ந்தவராக திகழ்ந்தவர் உ.நீலன்.

சென்னை சைதாப்பேட்டை விநாயகம்பேட்டை தெருவில் உள்ள (ராஜ்தியேட்டர் அருகில்) இல்லத்தில் 2.04.2024 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி வரையிலும், மாலை 4.30 மணிக்கு மேல் இரவு 10 மணிவரை கூடுவாஞ்சேரி நீலன் பள்ளி வளாகத்திலும் இறுதி மரியாதை செலுத்த திருவுடல் வைக்கப்படும்.

நாளை புதன்கிழமை காலை 6 மணி முதல் உ.நீலனின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீலன் பள்ளி வளாகத்தில் திருவுடல் வைக்கப்படுகிறது. இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Savings | குறைந்த முதலீடு அதிக லாபம்..!! தபால் துறையின் சூப்பர் திட்டம்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Chella

Next Post

காங்கிரசுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன..? பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி...!

Tue Apr 2 , 2024
கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம். அதை நியாயப்படுத்தும் காங்கிரசுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடத்த நிகழ்வாக கடந்து சென்று விட முடியாது. கச்சத்தீவு அன்று தாரை வார்க்கப்பட்டதன் […]

You May Like