பெரும் சோகம்!. 20க்கும் மேற்பட்டோர் பலி!. பேருந்து கவிழ்ந்து கோர விபத்து!. 34 பேர் படுகாயம்!

iran accident 11zon

ஈரானில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர், மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.


தெற்கு ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தின் தலைநகரான ஷிராஸ் நகர் பகுதியில் நேற்று காலை பேருந்து ஒன்று 55 பேரை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஃபார்ஸ் மாகாணத்தின் அவசரகால அமைப்பின் தலைவர் மசூத் அபேத் கூறினார்.

ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 17,000 பேர் உயிரிழப்பை சந்திக்கும் ஈரான், சாலை மற்றும் தெரு விபத்துக்களில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணித்தல், பழைய வாகனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் போதுமான அவசர சேவைகள் இல்லாதது ஆகியவையே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Readmore: போலீஸ் வாகனத்தில் போலி நம்பர் பிளேட்..! மதுபான பாட்டில்கள் மற்றும் சீட்டுக்கட்டுகள்..! வெளிவரும் உண்மைகள்…!

KOKILA

Next Post

Slow poison!. சமையலுக்கு ரீபைண்ட் ஆயில் யூஸ் பண்ணுவதால் ஆபத்து!. ஆண்டுதோறும் 2 மில்லியன் பேர் பலி!. ஆய்வில் அதிர்ச்சி!

Sun Jul 20 , 2025
எண்ணெய்கள் சமையலுக்கு சுவையைக் கூட்டுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணெய்களை உபயோகிக்கின்றனர். ஆனால், இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதால், ஆயிரக்கணக்கான மக்களின் ஆரோக்கத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கேரள ஆயுர்வேத ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் (KRA) கூற்றுப்படி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்(ரீபைண்ட் ஆயில்) ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியன் மக்களின் மரணத்திற்கு காரணமாக மாறியுள்ளது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. டிரான்ஸ் ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ள […]
refined oil 11zon

You May Like