பென்ஷன் வாங்கும் நபர்களா நீங்க…? அப்போ 18-ம் தேதிக்குள் இதை செஞ்சு முடிச்சிருங்க…! இல்லனா சிக்கல்…

சென்னை தியாகராய நகர் சிவஞானம் சாலையில் உள்ள சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சலகங்களின் முதல்நிலை கண்காணிப்பாளரால் ஜூலை 28 அன்று காலை 11 மணிக்கு கோட்ட அளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

அஞ்சலகங்களில் பணியாற்றிய ஓய்வூதியர்கள், தங்களின் புகார்களை அல்லது ஆலோசனைகளை தபால், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் 18.07.2022-க்குள் அனுப்ப வேண்டும். தியாகராய நகர் தலைமை அஞ்சலகம், தியாகராய நகர் வடக்கு அஞ்சலகம், தியாகராய நகர் தெற்கு அஞ்சலகம், இந்தி பிரச்சார சபா உள்ளிட்ட இடங்களில் இடங்களில் பணியாற்றிய நபர்கள் மட்டும் இதில் பங்கேற்க முடியும்.

புகார்கள் அல்லது ஆலோசனைகளை dochennaicitycentral.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம். மேலும் 94442 51587 என்ற whatsapp எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் என சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சலகங்களின் முதன்மை கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் தனது செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

வசமாக சிக்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ : 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..

Fri Aug 12 , 2022
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேபிபி பாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கிய முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் என பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சோதனை […]

You May Like