குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு..? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு நடைபெற்று 7 மாதங்களைக் கடந்தும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால், உடனடியாக முடிவுகளை அறிவிக்கக் கோரி சமூக வலைதளங்களில் தேர்வர்கள் டிரெண்ட் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இம்மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்திய 14 தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் மாதம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும், தலைமைச் செயலகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் செய்தியாளர் பணியிடத்திற்கான வாய்மொழி தேர்வுக்கான முடிவுகளும், ஜெயிலர் பணியிடத்திற்கான தேர்வு முடிவுகளும் வரும் ஏப்ரலில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

”இனி எல்லாம் மாறப்போகுது”..!! பட்ஜெட்டில் மின்சாரத்துறை சார்பில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்..!!

Sat Mar 18 , 2023
தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை மறுநாள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் மின்சாரத்துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. கடந்த நிதியாண்டில் மின் துறையில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்ததாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு நடவடிக்கைகளால் 200 கோடி ரூபாய்க்கான இழப்பை குறைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தி […]

You May Like