குரூப்-4 தேர்வு… விளையாட்டு வீரர்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம்…!

group 2 tnpsc 2025

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றும் 690 விளையாட்டு வீரர்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கி உள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 22-ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் விளையாட்டு வீரர்கள் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரியவர்களில் 1280 பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்ததற்காக சான்றிதழ்களை உரிய படிவத்தில் பெற்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நவம்பர் 5 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 590 பேர் மட்டுமே சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டு போட்டி படிவங்களை பதிவேற்றம் செய்திருப்பதும் எஞ்சிய 690 பேர் எவ்வித ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யாததும் தற்போது தெரிய வருகிறது.

அதோடு விளையாட்டு போட்டி தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தவர்களும் தங்கள் சான்றிதழ்களை மட்டுமே பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.உரிய படிவத்தில் பெறப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யவில்லை. இவை மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாது. விளையாட்டு வீரர்கள் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் சங்கத்திடமிருந்த பெறப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் படிவங்களை பதிவேற்றம் செய்வதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

சான்றிதழ் ஆவணங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தேவையான கையெழுத்து பெறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் சான்றிதழ்களும், படிவங்களும் மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாது. விளையாட்டு வீரர்கள் பிரிவின் கீழ் ஒதுக்கீடு கோரி தேர்ச்சி மதிப்பெண் எடுத்துள்ள விண்ணப்பதாரர்கள் உரிய வகையில் பெறப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மற்றும் படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அவர்கள் நவம்பர் 14-ம் தேதிக்குள் தேவையான சான்றிதழ்கள் மற்றும் படிவங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு பிரிவில் பரிசீலிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வரும் 12-ம் தேதி சம்பவம்... 19 மாவட்டத்தில் கொட்டப் போகும் கனமழை...! வானிலை மையம் அலர்ட்...!

Sun Nov 9 , 2025
வரும் 12-ம் தேதி டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் […]
rain 2025 2

You May Like