கணவருக்கு ஆண்மை குறைவு பிரச்சனை இருந்ததால், மாமனார் மற்றும் நாத்தனார் கணவர் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத்தை சேர்ந்த பெண் புகார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. சிறுமிகள் முதல் வயதான மூதாட்டி வரை வயது வித்தியாசமின்றி பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது குஜராத்தின் வதோதராவில் ஒரு கொடுமையான சம்பவம் அரங்கேறி உள்ளது.. 40 வயது பெண் ஒருவர், தனது மாமனார் மற்றும் தனது நாத்தனாரின் கணவரால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
தனது கணவரின் விந்தணு எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததால், அவரை கர்ப்பமாக்கும் மாமனார் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 2024 பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண், திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் வீட்டிற்கு குடிபெயர்ந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் நவபுரா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் “ திருமணமான சில வாரங்களிலேயே, எனது வயதில் கருத்தரித்தல் கடினமாக இருக்கலாம் என்று உறவினர்கள் எச்சரிக்கத் தொடங்கி உள்ளனர். கருவுறுதல் பரிசோதனைகளில் தனது கணவரின் விந்தணு எண்ணிக்கை இயல்பை விட மிகக் குறைவாக இருப்பதாக தெரியவந்தது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் IVF சிகிச்சை பெற்றார், ஆனால் சிகிச்சை தோல்வியடைந்தது. அதற்கு பதிலாக ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்று நான் கூறினேன்.. எனது மாமியார் அந்த யோசனையை முற்றிலுமாக நிராகரித்து விட்டார்..
2024-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் இரவில், எனது படுக்கையறைக்குள் நுழைந்த என் மாமனார் நான் தூங்கும்போது பாலியல் வன்கொடுமை செய்தார்.. ஆனால், வேண்டாம் என்று நான் அழுத போது அவர் என்னை அடித்து அமைதியாக்கினார்.. எனது கணவர், என்னை அமைதியாக இருக்கச் சொன்னார்.. அவருக்கு உயிரியல் வாரிசு வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, நான் பேசினால் என்னுடைய நெருக்கமான புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்..
எனது மாமனார் என்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தார்.. ஆனால் நான் கர்ப்பமாகவில்லை.. கடந்த டிசம்பர் மாதம் எனது நாத்தனாரின் கணவரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.. தொடர்ந்து என் மாமனாரும், நாத்தனார் கணவரும் பல முறை இந்த செயலை செய்தனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் தான் கருவுற்றேன்.. ஆனால், ஜூலை மாதம் எனது கரு கலைந்துவிட்டது..” என்று தெரிவித்துள்ளார்.
இறுதியாக, ஜூலை கடைசி வாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையை அணுகி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.. மேலும், முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, காவல்துறையினர் மாமனார், நாத்தனார் கணவர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மீது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..