2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜகவின் கழுகு பார்வை தமிழகத்தை நோக்கியே இருக்கிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சியை நிலை நாட்டிட வேண்டும் என்ற நோக்கில் மத்திய பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக கூட்டணி சார்பில், மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதோடு, பாஜகவின் மூத்த தலைவர் என்ற நிலையிலும் அவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து எச் ராஜா கவர்னராக நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பிறகு மகாராஷ்டிரா (CPR-க்கு பதில்) அல்லது நாகலாந்து (இல.கணேசனுக்கு பதில்) கவர்னராக எச்.ராஜா நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த இரு முக்கிய நியமனங்கள், வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் நிலையை வலுப்படுத்தும் முயற்சிகளாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை உயர்ந்த பொறுப்புகளில் அமர்த்துவதன் மூலம், பாஜக தனது ஆதரவுத்தளத்தை விரிவாக்க விரும்புகிறது.
Read more: துணை குடியரசு தலைவர் தேர்தல்: INDIA கூட்டணி சார்பில் வைகோ போட்டி..?