H.வினோத் பிறந்தநாள்.. ஜனநாயகன் புதிய வீடியோ வெளியானது.. விஜய் ரசிகர்களுக்கு சர்பிரைஸ்!

Jana nayagan

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.. தனக்கென்ன கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. மேலும் தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்..


அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

இந்த படத்தை கேவிஎன் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் ஜனநாயகன் பட இயக்குனர் ஹெச். வினாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.. இன்றைய தினம் ஏதேனும் அப்டேட் வெளியாகுமா என்று காத்திருந்த ரசிகர்கள் படக்குழு சர்பிரைஸ் கொடுத்துள்ளது.. ஆம்.. இந்த வீடியோவில் ஹெச். வினோத் படத்தை இயக்கும் காட்சிகளுடன் விஜய் இருக்கும் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.. இந்த புதிய வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்..

Subscribe to my YouTube Channel

Read More : “ என் பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் இருந்து நீக்க வேண்டும்..” இளையராஜா வழக்கு.. எப்போது விசாரணைக்கு வருகிறது?

RUPA

Next Post

வீட்டில் எப்ப பார்த்தாலும் சண்டை வருதா? பணம் தங்கலையா? இந்த வாஸ்து குறைபாடு காரணமாக இருக்கலாம்!

Fri Sep 5 , 2025
வீட்டில் சிலந்தி வலை இருப்பது எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் என்பது வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிடத்தின் ஒரு முக்கியமான நம்பிக்கையாகும். இது வெறும் பூச்சி வலை மட்டுமல்ல, நிதி மற்றும் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும் வாஸ்து குறைபாடாகக் கருதப்படுகிறது. எனவே, சிலந்தி வலைகளின் எதிர்மறை விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.. நிதி இழப்பு மற்றும் பணப் பற்றாக்குறை வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, வீட்டின் மூலைகளிலோ அல்லது கூரைகளிலோ சிலந்தி வலைகள் […]
couples fight

You May Like