அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..
இஸ்ரேல் பல ஆண்டுகளாக ஈரானின் போக்குவரத்து கேமரா வலையமைப்பை ஹேக் செய்து, உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மொபைல் போன் அமைப்புகளுக்குள் ஊடுருவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…
தெஹ்ரானில் உள்ள போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்களில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக ஹேக் செய்யப்பட்டிருந்ததாகவும், அதன்மூலம் இஸ்ரேல் உளவு அமைப்புகள் முக்கிய தகவல்களை சேகரித்ததாகவும் தெரிவித்துள்ளது.
அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பாஸ்டூர் தெரு அருகே உள்ள வளாகத்திற்கு மூத்த ஈரான் அதிகாரிகள் வருகை தந்தபோது, அவர்களை இஸ்ரேல் நேரடியாக கண்காணித்து வந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
அந்த வளாகத்தை நோக்கி உள்ள ஒரு கேமரா குறிப்பாக பயனுள்ளதாக இருந்தது. அது பாதுகாப்பு வளாகத்தின் அன்றாட செயல்பாடுகளைப் பார்ப்பதற்கான “ஜன்னல்” போல இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கேமராக்கள் மூலம் கிடைத்த தரவுகளை பயன்படுத்தி, பாதுகாப்பு பணியாளர்களின் வீட்டு முகவரி, வேலை நேரம், பயண வழிகள், யாருக்கு பாதுகாப்பளிக்கிறார்கள் போன்ற விவரங்கள் தொகுக்கப்பட்டன. இதை உளவு அதிகாரிகள் “Pattern of Life” (வாழ்க்கை முறை வரைபடம்) என அழைக்கிறார்கள்.
பல ஆண்டுகளாக நடந்த உளவு நடவடிக்கை
இந்த உளவு நடவடிக்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றதாகவும், அதுவே 86 வயதான கமேனியை கொல்லல்ல வழி அமைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேரடி போக்குவரத்து தரவுகள் மூலம், சனிக்கிழமை காலை காமெனேயி எந்த நேரத்தில் அலுவலகத்தில் இருப்பார், அவருடன் யார் இருப்பார்கள் என்பதையும் CIA மற்றும் இஸ்ரேல் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை காலை தெஹ்ரானில் மையத்தில் உள்ள தலைமையக வளாகத்தில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது என்பதை இஸ்ரேல் உளவு அமைப்புகள் கண்டறிந்ததும், தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, முக்கியமாக, அந்த இடத்தில் கமேனி இருப்பார் என்பதை அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
மொபைல் நெட்வொர்க் முடக்கம்
பாஸ்டூர் தெரு அருகிலுள்ள சுமார் 10–12 மொபைல் போன் டவர்களின் சில பகுதிகளை இஸ்ரேல் முடக்கியது. இதனால் பாதுகாப்பு குழுவினரின் போன்கள் “busy” என காட்டி, எச்சரிக்கை தகவல்கள் அவர்களுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டது.
இந்த முழுமையான உளவு படம் உருவானதற்கு, இஸ்ரேலின் உயர் தொழில்நுட்ப சிக்னல் உளவு பிரிவு Unit 8200, இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாத், மற்றும் இராணுவ உளவு பிரிவு ஆகியவை முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.. பில்லியன் கணக்கான தரவுகளை ஆய்வு செய்ய “Social Network Analysis” என்ற கணித முறையும் பயன்படுத்தப்பட்டது.
முன்பும் நடந்த அதே மாதிரியான தாக்குதல்கள்
கடந்த ஆண்டு ஜூனில் நடந்த 12 நாள் போரின் போது, ஈரானின் பல அணு விஞ்ஞானிகள் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர்.
“முதலில் அவர்களின் கண்களை பறித்தோம்” என ஒரு உளவு அதிகாரி கூறியதாக அறிக்கை தெரிவிக்கிறது.
இஸ்ரேல் விமானப்படை பயன்படுத்திய “Sparrow” வகை ஏவுகணைகள், 1,000 கி.மீ தூரத்திலிருந்தே ஒரு உணவுக் மேசை அளவிலான இலக்கையும் தாக்கும் திறன் கொண்டவை. இதனால் ஈரானின் வான்வழி பாதுகாப்பு முறைகளைத் தாண்டி தாக்குதல் நடத்த முடிந்தது.
அரசியல் முடிவு
அயத்துல்லா அலி கமேனிக்கு பிறகு இரண்டாவது உச்ச தலைவர் காமெனேயியை கொல்வது தொழில்நுட்ப சாதனை மட்டுமல்ல, ஒரு அரசியல் முடிவு என்றும் கூறப்படுகிறது.. இந்த செய்திக்காக தற்போதைய மற்றும் முன்னாள் இஸ்ரேல் உளவு அதிகாரிகள் பலரிடம் பேட்டி நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கமேனியின் வாழ்க்கை முறை
கமெனி, ஹெஸ்புல்லா தலைவர் ஹாசன் நஸ்ரல்லா போல அடுக்குக்கீழ் பங்கர்களில் வாழவில்லை. நஸ்ரல்லா பல ஆண்டுகள் மறைவில் இருந்தாலும், 2024 செப்டம்பரில் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். ஆனால் கமேனி பொதுவெளியில் தோன்றுவதை தவிர்க்கவில்லை. தன்னை கொல்ல வாய்ப்பு இருப்பதைப் பற்றியும் அவர் பொதுவாக பேசியுள்ளார்.
தாக்குதலுக்கான சரியான நேரம்
சனிக்கிழமை காலை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்ததும், காமெனேயி மற்றும் ஈரானின் முக்கிய தலைமை ஒரே இடத்தில் இருப்பதால், அவர்களை கொல்லும் வாய்ப்பு ஏற்பட்டதாக உளவு அமைப்புகள் மதிப்பிட்டன. போர் தொடங்கிய பிறகு அவர்களை வேட்டையாடுவது கடினமாக இருக்கும் என்பதால், இந்த நேரமே சரியான தருணம் என தீர்மானிக்கப்பட்டது.
அமெரிக்க பங்கு
அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் சமீப வாரங்களில் ஈரானை தாக்குவதாக மிரட்டினாலும், அணு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும் என கூறப்பட்டு வந்தது. நடுவர் நாடான ஓமன் , ஈரான் சில சலுகைகள் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது.
ஆனால், சலுகைகள் கூட்டத்தில் இருப்பது உறுதியானதும், பல மாதங்களாக திட்டமிடப்பட்ட தாக்குதல் செயல்படுத்தப்பட்டது. அமெரிக்க இராணுவம் சைபர் தாக்குதல்களால் ஈரானின் கண்காணிப்பு, தொடர்பு அமைப்புகளை முடக்கி, இஸ்ரேல் விமானங்களுக்கு வழி அமைத்ததாக அமெரிக்க உயர் இராணுவ அதிகாரி ஜெனரல் டான் கேன் கூறினார்.
தாக்குதல் நிறைவேற்றப்பட்டது
“அவர் எங்கள் உளவு கண்காணிப்பிலிருந்து தப்ப முடியவில்லை” என டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.. சுமார் 200 போர் விமானங்கள் கொண்டு 500 இலக்குகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. அவர்கள் காலை உணவுக்காக கூடியிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டதாக டிரம்ப் கூறினார்.. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, ஈரான் அரசு தொலைக்காட்சி கமேனியின் மரணத்தை கருப்பு பட்டையுடன் உறுதிப்படுத்தியது.



