மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து.. கொடூரமாக தாக்கிய மருமகள்..!! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..

punjab woman thrashes motherinlaw 1

பஞ்சாப் மாநிலம் கோத்தே கிராமத்தை சேர்ந்த குர்பஜன்கவுர் தனது கணவரின் மரணத்திற்குப் பின் மகனின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக சொத்துக்களை பெயர் மாற்றுவது தொடர்பாக மருமகள் ஹர்ஜீத்கவுர் மற்றும் குர்பஜன்கவுர் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


இந்நிலையில் சம்பவத்தன்று சொத்தை தனது பெயருக்கு மாற்ற சொல்லி மருமகள் ஹர்ஜீத்கவுர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தனது மாமியார் குர்பஜன்கவுரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

அந்த வீடியோவில், மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து மீண்டும் மீண்டும் கடுமையாக அவர் தாக்குகிறார். இதை பார்த்த ஹர்ஜீத்கவுரின் மகன் அம்மா பாட்டியை அடிப்பதை நிறுத்துங்கள் என கெஞ்சுகிறான். ஆனால் ஹர்ஜீத்கவுர் கேட்காமல் தொடர்ந்து மாமியாரை தாக்குகிறார். இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த சிறுவன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.. இதற்கிடையே பஞ்சாப் மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு குர்தாஸ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடிதம் அனுப்பியது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more: ஷாக் நியூஸ்..! அக்.1 ஆதார் அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

English Summary

Hair pulled, slapped repeatedly, hit with steel glass: Woman beats mother-in-law in Punjab

Next Post

Breaking : இனி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பரப்புரைக்கு அனுமதி வழங்கக் கூடாது - ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..

Fri Oct 3 , 2025
தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக பல பொது நல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாக்கல் செய்யப்பட்டனமுன் ஜாமீன் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தாக்கல் செய்த மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. சிபிஐ விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட […]
vijay madurai hc

You May Like