தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணைய தளத்திற்குச் (tnpsc.gov.in) சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பிரிவில் 3935 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்காக, கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
முதற்கட்டமாக எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வு ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30க்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை tnpsc.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் சென்று தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கிராம நிர்வாக அலுவலர், ஜூனியர் உதவியாளர், ஜூனியர் வருவாய் ஆய்வாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட், தட்டச்சர், தனிப்பட்ட எழுத்தர், கள உதவியாளர், வனக் காவலர் உள்ளிட்டப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30க்கு முன்னரே தேர்வர்கள் தேர்வு நடைபெறும் அறைக்குள் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.