தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா இன்று தனது 50 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.. திரையில் அறிமுகமான ஆரம்பக் காலக்கட்டத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டு கடின உழைப்பு, விடாமுயற்சி மூலம் தன்னையே செதுக்கிய சூர்யா தற்போது தென்னிந்திய திரையுலகின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். நடிகர் சூர்யாவுக்கு அவரின் ரசிகர்களும், திரையுலகினும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் சூர்யாவின் திரை வாழ்க்கை, சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்..
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்துடன் 1997 ஆம் ஆண்டு வெளியான `நேருக்கு நேரு’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால் முதல் படத்திலேயே சூர்யா எளிதில் வெற்றி பெறவில்லை. மோசமான நடிப்புக்காக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்..
சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது என பல படங்களில் நடித்தாலும், நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டர் இல்லாததால் சூர்யாவால் அதிக அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை. ஆனால் பாலா இயக்கிய `நந்தா’ படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.. இதன் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் சூர்யா.. இதை தொடர்ந்து வெளியான கஜினி
படம் மூலம் சூர்யா ஒரு நட்சத்திர ஹீரோவாக மாறினார்.
நந்தா
மற்றும் கஜினி
படங்கள் சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையை மாற்றியது. மணிரத்னத்தின் ஆயுத எழுத்துப் படமும் சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது..
இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் படம், வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியாது.. இந்த படம். சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் மற்றொரு திருப்புமுனை.. ஆறு, சிங்கம் போன்ற கமர்ஷியல் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. மறுபுறம் காக்க காக்க, வாரணம் ஆயிரம் என பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார் சூர்யா..
சுதா கோங்க்ரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ சூர்யாவின் வாழ்க்கையில் மற்றொரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. ஜெய் பீம் படம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் கவனம் பெற்றார் சூர்யா. பின்னர் லோகேஷ் கனகராஜ இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கேமியோவாக மிரட்டினார் சுர்யா..
பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான கங்குவா படம் பெரும் தோல்வியை சந்தித்தது.. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ
கலவையான விமர்சனங்களை பெற்றது.. தற்போது, கருப்பு
படத்தின் வெளியீட்டிற்காக அவரின் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.. காத்திருக்கிறார்.
இதனிடையே நடிகர் சூர்யா சக நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்… ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி, நல்ல மகன், சகோதரர், நல்ல கணவருமான சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்.
சரி, சூர்யாவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரின் சொத்து மதிப்பு ரூ. 350 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு சென்னையில் சொந்தமாக பங்களா உள்ளது. சென்னை மற்றும் மும்பையில் ஆடம்பரமான வீடுகளையும், ஏராளமான சொகுசு கார்களையும் அவர் வைத்திருக்கிறார்.
சூர்யா 2D என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கிறார்.. சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட பல பாராட்டப்பட்ட படங்களை தயாரித்துள்ளது.. அவரது நிறுவனம் தொடர்ந்து வளர்ந்து வருவதால், சூரியாவின் நிதி மற்றும் படைப்பு செல்வாக்கு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், ரசிகர்கள் இரட்டை விருந்துக்கு காத்திருக்கிறார்கள். அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான கருப்புவின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யா 46, மே 19 அன்று ஹைதராபாத்தில் ஒரு பாரம்பரிய பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பு தொடங்கியது. நேர்த்தியான மற்றும் உணர்ச்சிபூர்வமான கதைகளுக்கு பெயர் பெற்ற வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பார்..
நடிகர், தயாரிப்பாளர், நன்கொடை, சேவை, பொது பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது என எதுவாக இருந்தாலும் சூர்யா ஒரு உண்மையான ஸ்டாராக வலம் வருகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..