களைகட்டிய தீபாவளி..!! கல்லா கட்டிய டாஸ்மாக்..!! 2 நாளில் ரூ.467 கோடி..!! முதலிடத்தில் எந்த மாவட்டம் தெரியுமா..?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் இரு நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

நாடு முழுவதும் இந்தாண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் மது விற்பனை என்பது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தீபாவளி உள்ளிட்ட எந்த பண்டிகை என்றாலும் ஆடை, ஆபரணங்கள், பலகாரங்கள், இறைச்சி விற்பனை விவரம் வெளியாகிறதோ இல்லையோ மதுபானம் விற்பனை விவரம் வெளியாகிவிடுகிறது.

அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் இரு நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11, 12 ஆகிய நாட்களில் மொத்தம் ரூ.467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 11ஆம் தேதி ரூ.221 கோடிக்கும், நவம்பர் 12ஆம் தேதி ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

மதுரை, திருச்சியில் அதிகளவில் மது விற்பனை :

தீபாவளிக்கு முந்தைய நாளில் மதுரை மண்டலத்திலும், தீபாவளியன்று திருச்சி மண்டலத்திலும் அதிக மது விற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.52.73 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி நாளான நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் ரூ.55.60 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லிஸ்ட் இதோ..!!

Mon Nov 13 , 2023
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை […]

You May Like