கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் தொடங்கியது.
கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த முறை விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரியில்லாமல் நிராகரிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களில் திருமணமான பெண்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தமிழகத்தில் விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு 45 நாட்களில் பணம் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை எந்த அப்டேட்டும் இல்லை. இந்நிலையில் முகாம் மூலம் விண்ணப்பித்தவர்கள் https://ungaludanstalin.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்களுடைய மொபைல் எண் மற்றும் ஓடிபி ஆகியவற்றை உள்ளிட்டு தங்கள் நிலையை அறிந்து கொள்ளலாம். விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் பணம் வழங்கப்படும் என்று தெரிகிறது.
எப்படி அறிவது?
* முதலில் ungaludanstalin.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
* திரையில் தோன்றும் Track Grievance என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* புதிய பயனராக இருப்பின், New User? Signup என்பதை தேர்வு செய்யவும்.
* அங்கு உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து Submit செய்யவும்.
* நீங்கள் கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு OTP (ஒரு முறை கடவுச்சொல்) வரும். அதை பதிவு செய்து சமர்ப்பிக்கவும்.
* இதனால் உங்களுக்கான பயனர் கணக்கு இணையதளத்தில் உருவாகும்.
* பின்னர் மீண்டும் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்து லாகின் செய்யலாம்.
* இவ்வாறு லாகின் செய்த பிறகு, நிலுவையில் உள்ள கோரிக்கை, முடிவுற்ற கோரிக்கை, காத்திருப்பில் உள்ள கோரிக்கை போன்ற அனைத்தையும் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனிலேயே பார்க்க முடியும்.
Read more: கருத்தடை மாத்திரைகள் மார்பகப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறதாம்!. ஆய்வில் அதிர்ச்சி!