இப்போதெல்லாம் பிரஷர் குக்கர் இல்லாத வீடுகளே இல்லை. எல்லோரும் எளிதாக சமையலுக்கு குக்கரைப் பயன்படுத்துகிறார்கள். இப்போது, குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்ட பிறகு உடலில் நுழைந்த நச்சுப் பொருட்களால் ஒருவர் நோய்வாய்ப்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மும்பையை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர், சமீபத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபரின் உடலில் குவிந்த நச்சு கூறுகள் காரணமாக கடுமையாக நோய்வாய்ப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
மருத்துவர் விஷால் கபாலே கூறுகையில், வெளிப்புற உணவு சாப்பிடாத, கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒருவரின் உடலில் விஷம் எவ்வாறு குவிந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். பிரஷர் குக்கர் உணவு அந்த நபரின் ஆரோக்கியத்தை மோசமாக்கியுள்ளது. இது பழைய குக்கரிலிருந்து வரும் அதே உடல்நலக் கேடுதான் என்று விளக்கமளித்துள்ளார். அதாவது நோயாளியின் மனைவி கடந்த 20 ஆண்டுகளாக உணவு சமைக்க அதே பிரஷர் குக்கரைப் பயன்படுத்திவந்தது தெரியவந்தது.
குக்கர் பழையதாக இருந்தால், எச்சரிக்கை அவசியம். பழைய குக்கரில் உள்ள ரப்பரும், பழைய உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதும் அதிக உடல்நல ஆபத்தை ஏற்படுத்துவதாக டாக்டர் விஷால் கபாலே கூறினார். பழைய குக்கரில் உணவு சமைப்பது அதன் ரப்பர் மற்றும் உலோகத்திலிருந்து நச்சு கூறுகளை உருவாக்குகிறது. இது உடலுக்குள் குவிகிறது. பழைய குக்கரில் உருவாகும் நச்சு கூறுகளின் அளவு மிகக் குறைவு. ஆனால் அது உடலில் குவிகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு, இந்த நச்சு கூறுகள் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டாக்டர் விஷால் கபாலே கூறினார்.
ஈய விஷம் மிகவும் ஆபத்தானது: இது உடலில் நச்சு கூறுகளை குவிப்பதன் மூலம் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று டாக்டர் விஷால் கபாலே கூறினார். குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது. வயிற்று வலி, தலைவலி, வாந்தி, இரத்த சோகை, உடல்நிலை சரியில்லாமல் இருப்பது, சிறுநீரக பிரச்சினைகள், உணர்வு இழப்பு, பார்வை பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இந்த ஈய விஷ அபாயத்தில் தோன்றும் அறிகுறிகள் என்று அவர் கூறினார்.
பழைய குக்கர்கள் ஏன் அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன? பழைய குக்கரைப் பயன்படுத்துவதால் ஆபத்து அதிகம். குக்கரைப் பயன்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் உள்ளது. ஒரு குக்கரை 7 முதல் 10 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குக்கரைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், தவிர்க்க முடியாமல் குக்கரைப் பயன்படுத்தினாலும், பல ஆண்டுகளாக ஒரே குக்கரைப் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்வப்போது குக்கர் ரப்பரை மாற்றி நீண்ட ஆண்டுகள் குக்கரைப் பயன்படுத்துவது நல்ல முடிவு அல்ல என்று விஷால் கபாலே கூறினார்.