ஐடிஐ, டிப்ளமோ முடிச்சிருக்கீங்களா..? திருச்சி பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. இன்றே கடைசி நாள்..!

BEL JOB 2025

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் தொழிற்பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 760 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதன் மூலம் உதவித்தொகையுடன் பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.


பணியிட விவரம்:ஐடிஐ பிரிவில் – 550 பணியிடங்கள், டிப்ளமோ பிரிவில் – 90 பணியிடங்கள், பட்டப்படிப்பு தகுதி பிரிவில் – பணியிடங்கள் என மொத்தம் 760 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி:

  • Trade அப்ரண்டிஸ்: பள்ளி படிப்பிற்கு பின்னர், அந்தந்த பிரிவுகளில் ஐடிஐ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • டெக்னீஷியன் அப்ரண்டிஸ்: அந்தந்த பாடப்பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • பட்டப்படிப்பு அப்ரண்டிஸ்: அந்தந்த பொறியியல் பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • HR உதவியாளர்: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.A முடித்திருக்க வேண்டும்.
  • முழு நேர கல்வியில் படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம், தொலைத்தூர கல்வியில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

உதவித்தொகை: Trade அப்ரண்டிஸ் (ஐடிஐ தகுதி) பயிற்சிக்கு தொழிற்பயிற்சி விதிமுறைகளின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும். டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (டிப்ளமோ தகுதி) பயிற்சிக்கு மாதம் ரூ.11,000 உதவித்தொகை வழங்கப்படும். பட்டப்படிப்பு அப்ரண்டிஸ் பயிற்சிக்கு மாதம் ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பதார்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி? ஐடிஐ தகுதி பெற்றவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்திலும், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தகுதி உள்ளவர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, https://trichy.bhel.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: செப்டம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் மூழ்கிய தாய்..!! பிஞ்சு குழந்தைனு கூட பாக்கல..!! விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல்..!!

English Summary

Have you completed your ITI or diploma? Employment at Trichy Bell Company.. Today is the last day..!

Next Post

காதலனை வைத்து கள்ளக்காதலனுக்கு செக்..!! 25 வயது பள்ளி ஆசிரியையின் பலான வேலை..!! அந்தரங்க வீடியோவால் சிக்கிய தொழிலதிபர்..!!

Mon Sep 15 , 2025
தனது குழந்தைகளின் பள்ளி ஆசிரியையுடன் கள்ளத்தொடர்பு வைத்த தொழிலதிபர், கடத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மகாலட்சுமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ராகேஷ் வைஷ்ணவ், ஒரு தொழிலதிபர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் ஐஸ்கான் கோவில் அருகே தனியார் பள்ளியில் படிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 5 வயது மகனை பள்ளியில் சேர்ப்பதற்காக […]
Sex Rape 2025

You May Like