மக்களே இதை செய்துவிட்டீர்களா..? ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை திடீர் நிறுத்தம்..? காரணம் என்ன..?

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு அறிவுறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பலரும் இணைக்காமலேயே உள்ளனர்.

Ration

இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த கூடுதல் அவகாசத்திலும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இணைக்காதவர்களுக்கு ஜூலை 1 முதல் அரிசி, கோதுமை போன்ற எந்த ஒரு பொருளும் கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுளது.

CHELLA

Next Post

ஹஜ் பயணத்தில் முதல் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை...!

Mon May 15 , 2023
ஹஜ் பயணத்தில் முதல் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 2023 ஹஜ் பயணத்தில் சவுதி அரேபியாவில் ஹாஜிகளுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக மற்றும் மருத்துவப் பிரிவினருக்கு மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஏற்பாடு செய்த பயிற்சியை மத்திய அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி தொடங்கி வைத்தார். இந்தப் பயிற்சியானது டெல்லி லோதி சாலை பகுதியில் உள்ள ஸ்கோப் வளாக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான ஹஜ் […]
images 2023 05 15T074833.465

You May Like