யார பார்த்தது ஊழல் கட்சினு சொல்றீங்க..? உங்க மூஞ்சை Dettol போட்டு கழுவுங்க…! காங்கிரசுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி…!

ஊழலைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பாஜக அரசு ஊழல் செய்ததாக காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோ மக்களவையில் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் முகத்தை ‘டெட்டால்’ கொண்டு கழுவ வேண்டும். நரேந்திர மோடி அரசு மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து அவர் மக்களவையில் கடுமையான கருத்தை முன்வைத்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு இரண்டு முறை வாட் வரியைக் குறைத்த பிறகும், வாட் வரியைக் குறைக்காத மாநிலங்களின் பட்டியலை வாசித்தார். இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் டீசல் மீதான வாட் வரியை ஏன் உயர்த்தியது என்று காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோயிடம் கேள்வி எழுப்பினார்.

Vignesh

Next Post

படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் Youtube விமர்சகர்கள்.. கேரள திரைத்துறை எடுத்த அதிரடி முடிவு... பலன் கொடுக்குமா..?

Sat Feb 11 , 2023
ஒரு காலத்தில் திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் ஆகியோர் மட்டுமே பிரபலங்களாக கருதப்பட்டனர்.. ஆனால் தற்போது அப்படி இல்லை.. சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சி யார் வேண்டுமானாலும், செலபிரிட்டி ஆகலாம் என்ற நிலையை உருவாக்கி உள்ளது.. இது ஒரு வகையில் வரவேற்கத்தக்க விஷயம் தான்.. இதனால் பல துறைகளிலும் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டாலும், திரைப்படத் துறையில் மட்டும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.. காரணம் ஒரு […]

You May Like