இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில், குறைந்தது ஒரு பிளாஸ்டிக் நாற்காலியாவது இருக்கும். இந்த நாற்காலிகளின் பின்புறத்தில் உள்ள துளைகளை நாம் பெரும்பாலும் கவனித்திருக்கிறோம். அந்த துளைகள் வெறுமனே வடிவமைப்பிற்காக இருக்கலாம் என நாம் நினைப்பதுண்டு. ஆனால், அந்தச் சிறிய துளைகளுக்குப் பின்னால் பல முக்கியக் காரணங்கள் உள்ளன.
நாற்காலிகளை அடுக்கி வைக்க எளிமை : பிளாஸ்டிக் நாற்காலிகளை அடுக்கி வைக்கும்போது, அவற்றின் இடையே காற்று சிக்கிக்கொள்ளும். இதனால் ஏற்படும் வெற்றிட விளைவால், நாற்காலிகளைப் பிரிப்பது கடினமாகிறது. பின்புறத்தில் உள்ள துளை, இந்த வெற்றிடத்தை நீக்கி, நாற்காலிகளை எளிதாகப் பிரிக்க உதவுகிறது.
ஆரோக்கியம் மற்றும் வலிமை : இந்தத் துளைகள், நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களுக்கு காற்றோட்டத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் வசதியாக இருக்க உதவுகிறது. மேலும், துளைகள் நாற்காலியின் பின்புறத்தில் ஏற்படும் அழுத்தத்தைச் சமமாகப் பரப்பி, அது உடைவதை தடுக்கிறது. இந்த வடிவமைப்பால், பிளாஸ்டிக் நாற்காலிகள் எடை குறைவாக இருந்தாலும், அதிக சுமைகளைத் தாங்கி நீண்ட காலம் நீடிக்கும்.
உற்பத்தி மற்றும் செலவு குறைப்பு : நாற்காலிகள் தயாரிக்கும்போது, உருகிய பிளாஸ்டிக் அச்சுக்குள் ஊற்றப்படுகிறது. அந்தத் துளை, அச்சிலிருந்து நாற்காலியை எளிதாக வெளியே எடுக்க உதவுகிறது. மேலும், இது நாற்காலியின் எடையை குறைத்து, உற்பத்திக்கான பிளாஸ்டிக் செலவை வெகுவாக குறைக்கிறது. ஒரு நாற்காலியில் சிறிய அளவு பிளாஸ்டிக் மிச்சமானாலும், மில்லியன் கணக்கான நாற்காலிகள் உற்பத்தி செய்யும்போது இது பெரிய சேமிப்பாகும்.
Read More : இது தெரிந்தால் இனி வெறும் இளநீர் குடிக்க மாட்டீங்க..!! இந்த 5 பொருளிலும் அவ்வளவு நன்மைகள் இருக்கு..!!



