சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே பல துறைகளில் சிறந்து விளங்கி சாதித்து வருவார்கள். அந்த வகையில் நடிகராக, துணை இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருப்பவர் மாரிமுத்து. அவரது குடும்ப புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?
புலிவால், கண்ணும் கண்ணும் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார் மாரிமுத்து. யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி தற்போது வரை திரைப்படங்களில் நடித்து வருகின்றார். வெள்ளித்திரையில் நடிகராகவும் வில்லனாகவும் கொடிகட்டி பறந்து வருகின்றார். சினிமா மட்டும் இன்றி சின்னத்திரையிலும் இவர் திறமையை பார்க்கலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாகவும் மாமனாராகவும் நடித்து வருகின்றார் மாரிமுத்து.

சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் இவர் பங்களிப்பு அதிகமாக உள்ளது. சீரியலின் வெற்றிக்கு முக்கியமான காரணம் மாரிமுத்துதான். இப்படி சினிமாவில் சீரியலில் வில்லனாக நடிக்கும் இவர் குடும்பம் அன்பானது, அழகானது.

கதாபாத்திர தோற்றத்திற்கு எதிராக குடும்பத்தில் இருக்கின்றார். அன்பான அப்பாவாகவும், கணவனாகவும் வலம் வருகின்றார். அவர்களது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகர் மாரிமுத்துவும் தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுடுள்ளார்