மகாராஷ்டிர மாநிலம் போர்ஜினி கிராமத்தை சேர்ந்த சஞ்சீவாணி என்ற பெண்ணுக்கு, கோலேகாவ் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவருடன் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், இந்த திருமணத்திற்கு முன்பே, லகான் பண்டாரே என்பவரை சஞ்சீவாணி காதலித்து வந்துள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகும் இவர்களின் கள்ளத்தொடர்பு நீடித்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில், சஞ்சீவாணி தனது காதலன் லகான் பண்டாரேயை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர், இருவரும் ஒரு அறைக்குள் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, சுதாகரின் குடும்பத்தினர் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். உடனடியாக சஞ்சீவாணியின் தந்தைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த தந்தை, தனது மகளை கள்ளக்காதலனுடன் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து, தந்தை இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், அவர்களின் கை, கால்களை கட்டி, ஊருக்கு வெளியே உள்ள ஒரு ஆழமான கிணற்றில் தூக்கிப் போட்டுள்ளனர். மறுநாள் தகவல் அறிந்த போலீசார், கிணற்றில் சடலமாக மிதந்த இருவரையும் மீட்டனர்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக, சஞ்சீவாணியின் தந்தை, கணவர் மற்றும் உறவினர்கள் சிலரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.