மேட்ரிமோனி காதலனுடன் உல்லாசம்.. 2வது திருமணத்திற்கு வரன் தேடிய கோவை பெண்ணுக்கு நேர்ந்த கதி..! கனவிலும் மறக்கவே மாட்டார்..

covai mrg fraud

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் கோவை ஒண்டிப்புதூரில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 16 வருடங்கள் ஆகிறது. அவரது கணவர் 2022 ஆண்டில் இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். துணி வியாபாரம் செய்யும் அந்த பெண்ணுக்கு அவரது சகோதரி மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் மணமகன் தேடி வந்துள்ளார்.


அப்போது இணையதளத்தில் கொடுத்து இருந்த செல்போன் எண் மூலம் கடந்த ஜனவரி மாதம் சென்னையை சேர்ந்த 38 வயது வாலிபர் தொடர்பு கொண்டு தனக்கு திருமணமாகவில்லை என்றும், அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதன் பின்பு இருவரும் பழகி வந்துள்ளனர். அந்த சமயங்களில் அவர் தொழில் தேவைக்காக எனக் கூறி அந்த பெண்ணிடம் ரூ. 10 லட்சம் மற்றும் 2.5 பவுன் நகை வாங்கியுள்ளார்.

அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, கட்டாயப்படுத்தி உடலுறவும் கொண்டிருக்கிறார். பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பணம் நகைகளை வாங்கி கொண்ட பின் அந்த நபர் பெண்ணிடம் பழகுவதை தவிர்த்து வந்தார். அந்த நபர் மீது சந்தேகம் ஏற்படவே அவரை பற்றி விசாரிக்க தொடங்கினார். அப்போதுதான் அவருக்கு பல அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

மேட்ரிமோனியல் தளத்தில் அறிமுகமான அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், இதேபோல் வேறு ஒரு பெண்ணை ஏமாற்றியதாகவும் காவல் நிலையத்தில் புகார் உள்ளதும் தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டது குறித்தும், பணம், நகை குறித்து கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அதன் பின் தன்னிடம் பழகி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நகை பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும், இதுபோல மேலும் பல பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்க அந்த இளைஞன் மீது உறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த இளம் பெண் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: அமமுகவுக்கு மிரட்டல்..? டென்ஷன் ஆன டிடிவி தினகரன்..! பரபர ப்ரஸ் மீட்..

English Summary

Having fun with her lover in matrimony.. The fate of a Coimbatore woman who was looking for a groom for her second marriage..!

Next Post

நீங்க எல்லாவற்றிற்கும் பதட்டப்படுறீங்களா? இந்த 3 எளிய டிப்ஸை பின்பற்றுங்கள்! BP இருக்காது, ஹேப்பியா இருங்க!

Mon Dec 22 , 2025
பலருக்கு, விடுமுறை நாட்கள் கலவையான உணர்வுகளின் கலவையைக் கொண்டு வரக்கூடும். சிலருக்கு இது அற்புதமான நேரம் என்று தோன்றுவது, மற்றொருவருக்கு சோர்வு மற்றும் பதட்டமான நேரமாக இருக்கலாம். அமெரிக்க மனநல சங்கத்தின் ஆரோக்கியமான மனங்கள் கணக்கெடுப்பின்படி, அமெரிக்க வயது வந்தோரில் பாதி பேர், அதாவது 41%, கடந்த ஆண்டை விட இந்த விடுமுறை காலத்தில் தாங்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவோம் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் 46% பேர் […]
joy happy

You May Like