இன்று காலை முதல் நாட்டின் பல பகுதிகளில் HDFC வங்கி சேவைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். வங்கி சேவை மட்டுமல்ல, UPI பரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டு பெரும்பாலானவர்கள் பணம் செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
தகவல்களின்படி இந்தியர்கள் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் UPI சேவை நாடு முழுவதும் இன்று காலை திடீரென முடங்கியது. இதனால் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் ஸ்தம்பித்து, பயனர்கள் பெரும் சிரமத்திற்கும், குழப்பத்திற்கும் ஆளாகினர். கடைகளுக்குச் சென்று பணம் செலுத்த முயன்ற வாடிக்கையாளர்கள் UPI மூலம் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்துள்ளனர்.
UPI சேவை முடங்கியதால் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, X தளத்தில் ஆயிரக்கணக்கான பதிவுகள் குவிந்தன. பயனர்கள் தங்கள் கோபத்தையும், சிரமத்தையும் வெளிப்படுத்தினர். அதிகாலை முதலே இந்த பதிவுகள் எக்ஸ் தளத்தை நிரப்ப, பயனர்களின் வேதனையும் விரக்தியும் சமூக வலைத்தளங்களில் வெளிப்பட்டன. இந்தச் சூழலில் பல நகைச்சுவையான மீம்களும் வைரலாகின.
HDFC வங்கி, தற்போதைய பிரச்சனைக்கான காரணத்தை ஆராய்ந்து சேவைகளை விரைவில் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வாடிக்கையாளர்களை பாதிப்புகளை குறைக்க, வங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Read more: அதிமுக எம்.பி இன்பதுரைக்கு மத்திய கல்வி அமைச்சக துறையில் முக்கிய பதவி..!!