2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் இன்னும் குழப்பம் நீங்கவில்லை. ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், ஒருங்கிணைப்பே கட்சியை மீண்டும் எழச் செய்யும் என வலியுறுத்துகிறார் மூத்த தலைவர் செங்கோட்டையன். ஆனால், துரோகிகளுக்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறி வருகிறார்.
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பத்திரிகையாளர்களைத் தவிர்த்து, கைக்குட்டையால் முகத்தை மூடியபடி காரில் சென்றதுதான் அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதமாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் இது குறித்து தங்களுடைய கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.
அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முகத்தை முடி கொண்டு செல்லும் அவசியம் என்ன என தன்னுடைய கேள்விகளை எழுப்பியுள்ளார். டிடிவி தினகரன் கூறுகையில், “முன்பு தன்மானமே முக்கியம் என பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்று அமித் ஷாவை சந்தித்து, முகம் மறைத்து வெளியே வந்திருக்கிறார். இனி அவர் ‘முகமூடியார் பழனிசாமி’ என அழைக்கப்படுவார்,” எனக் கடுமையாக தாக்கினார்.
எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் இருப்பது அவரது அன்பு மகன் என ஊடகங்களில் செய்தி வெளியானது. உடன் சென்ற மற்றவர்களை எல்லாம் முதலில் அனுப்பி விட்டு அப்புறம் வந்துள்ளார். அதற்கு என்ன காரணம் என அவர்தான் சொல்ல வேண்டும். அதிமுக தொண்டர்கள் இனிமேலும் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம். இரட்டை இலையை வைத்துக்கொண்டு அ.தி.மு.க தொண்டர்களை ஏமாற்றுகிறார் இபிஎஸ்.” எனக் கூறினார்.
Read more: விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ஒரே வார்த்தையில் ரஜினி சொன்ன ‘நச்’ பதில்!